பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

செரு-கெரள்; செய்-கெய்; செருப்பு-கெர்பு: செருமுகெம்மு: செவி-கெவி; செறு-கிறு சென்னி-கென்னெ: சுவர்-கேர்; சே-கே; சேரி-கேரி, சேல்-கேல்; சேரன்கேரன்.’

கேல் என்னும் கன்னட வடிவம் என்பதன் திரிபு என்பர். கயல் என்னும் சொல்லுக்கும் சேல் என்னும் சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.

கேரள புத்ர” என்னும் தொடர் அசோகர் கல்வெட்டில் சேரமான் என்பதைக் குறிக்கிறது. அதனல், அக் காலத்தில் கேரல’ என்ற சொல்லே வழக்கில் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. எனவே, ககரம் சகரமாக மாறியது கி. மு. 300க்கு அண்மையிலேயே என்பர்.

தொல்காப்பியர் உரியியலில் சீர்த்தி என்ற சொல்லுக்கு மிகுபுகழ் என்று பொருள் கூறுவர். கீர்த்தி என்னும் வட சொல்லே சீர்த்தி என மாறியிருக்கலாம் எனக் கருத இடம் தருகிறது.”

விதி விலக்கு

சில சொற்கள் திரிவதில்லை. முன்னுயிர்களை அடுத்து டணழள எனும் வளைநா ஒலிகள் தொடர்வதே அதற்குக் காரணம் என்பர். சில தெலுங்குச் சொற்கள் இச் சூழ்நிலை யில் மாறுவது உண்டு. தமிழ், மலையாளத்தில் இச் சூழ்நிலை யிலும் ககரம் சகரமாக மாறுவதில்லை.

கெடு-தமிழ், மாற்றம் இல்லை. செடு-தெலுங்கு, மாறிவிட்டது. கிளி-தமிழ், சிலுக-தெலுங்கு; கீள்-தமிழ், சீல்தெலுங்கு என்பன பிற சான்றுகள்.

P. பக். 41

1. C. P. பக். 32.40 3. C.

4, C. Ρ, ιμάς, Δ1

2. . . . 40