பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

கிட, கிழங்கு, கிழக்கு, கிழம், கெழு, கிரி,கிள், கிளர், கிள, (கிளவி) கிளை, கிள்ளு, கீழ், கேள் இத் தமிழ்ச் சொற்கள் மாற்றம் பெறவில்லை.

மற்றாெரு வகையிலும் தெலுங்கு, தமிழினின்று மாறு படுகிறது. ககரத்தை அய் தொடருமிடத்துத் தமிழில் மாற்றம் பெறவில்லை; தெலுங்கில் மாறிவிட்டது.

கய் (தமிழ்)-சேயி (தெலுங்கு) கய் (கசப்பு) தமிழ்-சேது (தெலுங்கு) பழைய சொற்கள் சில மாருமலும் வழங்குகின்றன. அவை கன்னடத்திலிருந்து பிற்காலத்தில் தமிழில் புகுந்திருக் கலாம்; அல்லது பேச்சு மொழியினின்று இலக்கியத்தில் புகுந் திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் கீரை கீர,கூர கீரெ கீரெ கீல் கீலு - கீலம் கெம்பு கெம்பு கெம்பு கெம்பு

மொழியிடைக் ககரம் கெடுதல்

பேச்சு மொழியில் மொழியிடை வரும் ககரம் தன்முன் னின்ற உயிர் நீளுமிடத்துக் கெடுதலும் உண்டு.

அகப்பை - ஆப்பை, துகள் - தூள்: பகுதி - பாதி: புகுந்து-பூந்து: அகத்துக்காரி-ஆத்துக்காரி, அகமுடை யான்-ஆம்படையான்; தகப்பன்-தோப்பன்.

முன்னின்ற உகரம் ஒகரமாகத் திரியும் போதும் ககரம் கெடுதல் உண்டு. -

புகையிலை-பொகயிலே-பொயலே. இலக்கிய வழக்கிலும் இத்திரிபு காணப்படுகிறது. தொகுப்பு-தோப்பு: பகல்-பால்; மகன்-மான்.

1. C. D.P. Lu4, 1 12