பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

சகரம்

மொழி முதலில் வல்லொலியாக ஒலிக்க வேண்டிய சகரம் கற்றாேர் பேச்சில் உரசு ஒலியாகவே ஒலிக்கிறது: ஈழ நாட்டி லும், தென் தமிழகத்திலும், சேரிகளிலும் வல்லொலியே பெற்றுள்ளது. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரில பட்டர்'சோறு என்னும் தமிழ்ச் சொல்லை Cor எனவே குறித் துள்ளார்.

மலையாளத்தில் சகரம் தடையொலியாகவே ஒலிக்கிறது தெலுங்கில் உயர்குடிமக்கள் சகரமாகவே ஒலிக்கின்றனர் தாழ் குடியினரே ஸ்கரமாக ஒலிக்கின்றனர்.

கன்னடத்தில் உயர்குடிமக்கள் லகரமாகவும் தாழ்குடி மக்கள் சகரமாகவும் ஒலிக்கின்றனர்.

மொழி முதற்கண் சகரம் கெடுதல் உண்டு. இது தென் திராவிட மொழியின் தொல்லியல்பு.

சவில் (பர்ஜி)-சவ்வி-(கொண்டா)-அவல் ) 5 (( சாருங்க் (கோந்தி)-ஆறு (தமிழ்) சீ (Si)-(கொலாமி)-ஈ (தமிழ்) சுப் (Sup)-(கொலாமி)-உப்பு (தமிழ்) (Saiyung)-(கோந்தி)-அய்ந்து (தமிழ்) சீர் (Cir)-(கொலாமி) ஈர் (தமிழ்) கூஇ; சேர் (seru)-(கோந்தி)-ஏர் (தமிழ்) சணிலு (துளு)-அணில் (தமிழ்) சக்கிலி (தெலுங்கு)-அக்குள் (தமிழ்) சந்த (கன், துளு); சந்தமு (தெலுங்கு)-அழகு (தமிழ்) சகரம் தென் திராவிட மொழிகளில் இழப்பு அடைய மத்திய திராவிடத்திலும் பிராஹா நீங்கலாக வடதிராவிடத் திலும் அஃது இழப்புப் பெறவில்லை.” .

1. C. P. பக். 106