பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

சோழர் கல்வெட்டுகளில் குயவர் என்பது குசவர் என்றும், உயர்த்த என்பது உசத்த எனவும் வழங்குகிறது.’

பேச்சு மொழியில் பையன்கள் என்பது பசங்க எனத் திரிபு பெற்றுள்ளது.

பழந்தமிழில் சகரம் கெட்டது ஒருபுறமிருக்க இன்றைய தமிழில் சகரம் சேர்தலும் உண்டு.”

வரி-வரிசை குடி-குடிசை புரி-புரிசை கடைகடைசி; அரி-அரிசி.

சகரம் தகரமாகத் திரிந்தது போகத் தகரம் சகரமாகத் திரிந்த சொற்களும் இக் காலத்தில் வழங்குகின்றன.

பெரிது-பெரிசு வயது-வயசு, மனது-மனசு, புலைத்தி -புலைச்சி; செய்தான்-சேஞ்சான்; சிறிது-சிறிசு, மைத் துனன் - மச்சினன்; மைத்துனி - மச்சினி, வைத்தான் - வச்சான்.

டகரம்

டகரமும் றகரமும் மொழி முதற்கண் வருவது இல்லை. இவை இரண்டும் ஈரெழுத்துகளின் புணர்ப்பால் ஏற்பட்டவை எனக் கருத இடம் உண்டு.

ள்+த் = ட் ழ்+த் = ட் ல்+த் = ற்

இக் காரணம் பற்றியே இவை மொழி முதற்கண் வருவ தில்லை.

தென் திராவிட மொழிகளில் ளகரமும் டகரமும் மாறி இடம் பெறுகின்றன. ளகரமே பழையது; அது ணக்ரமாகவும் மாறுகிறது.

1. C. D. P. Li. 112. - 2. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும்-பக். 181.