பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

சில சொற்களில் ரகரம் கெடுதல் உண்டு.

பருப்பு (தமிழ்)-பப்பு (தெலுங்கு) நெருப்பு ( ‘ )-நிப்பு (தெலுங்கு) உருண்டை( ‘ )-உண்டை (பேச்சுத் தமிழ்) இருப்பை ( ‘ )--இப்பை (கன்.)

சொற்களிடையில் ரகரம் தோன்றுதலும் உண்டு.

தேகம்-த்ரேகம் கோவை-கோர்வை

லகரம்

லகரம், மொழி முதற்கண் வருவதில்லை. இக் காலப் பிறமொழிச் சொற்கள் மொழி முதற்கண் லகரம் பெற்று வருகின்றன.

லட்டு, லாட்டரி, லாரி, லாவகம், லீலை. லகரம் னகரமாகவும், றகரமாகவும் மாறுவதைத் தவிர வேறு மாற்றங்கள் பெறுவதில்லை.

லகரம் மொழி ஈற்றுக்கண் ஒலித் துணையாக உகரம் பெறுகிறது. -

சொல்-சொல்லு; பல்-பல்லு

இந்த உகரம் ஏனைய இடையின எழுத்துகளாகிய ரகரத் தோடும், ளகரத்தோடும், ழகரத்தோடும் சேர்கிறது.

கேள்-கேளு; பேர்-பேரு; வாழ்-வாழு

வகரம் -

இது மொழி முதற்கண்ணும் வழங்குகிறது. எனினும்: இதழ்குவி உயிர்களாகிய உ, ஊ, ஒ, ஓ - என்பவற்றாேடு மொழி முதற்கண் வருவதில்லை.

மொழியிறுதிக்கண் வகரம் வருதல் இல்லை. தொல்காப் பியர் அவ், இவ், உவ், தெவ் என்ற நான்கு மொழிக்கண்