பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இட்ம் - இடன், மரம்-மரன் நிலம் - நிலன்: குளம் - குளன்; அறம் - அறன்: முகம் - முகன்

திருச்சி, தஞ்சைப் பகுகிகளில் முப்பது என்பது நுப்பது என வழங்குகிறது. நாற்பது என்பதை ஒட்டி முப்பது, நுப்பது ஆகி இருக்க வேண்டும்.”

இடையின மெய்கள் : யகரம்

தமிழ் ஒன்றில் மட்டும் யகரம் நிலைபெற ஏனைய திராவிட மொழிகளில் கெடுகிறது என்பர்.”

பழந்தமிழில் யகரம் ஆகாரத்தோடு மட்டும் மொழி முதற்கண் வந்தது.

யாறு(பழந்தமிழ்)-ஆறு(தமிழ், மலை). ஏறு (தெலு) யாடு ஆடு (தமிழ், மலை, :@ (கன்). மொழியிடையில் யகரம் கெடுதலும் உண்டு.

பெயர்-பேர்; வியர்வை-வேர்வை

சில சொற்களில் யகரம் சகரமாக மாறுதல் உண்டு.

முயல்-முசல் - அயல்-அசல் பையன்கள்-பசங்கள் வயவு-வசவு (திட்டுதல்) பய்ம்பொன்-பசும்பொன் உயிர்-உசிரு

ரகரம்

ரகரம் மொழி முதற்கண் வருவதில்லை. சில சொற்களில் ரகரம் லகரமாக மாறுதல் உண்டு.

இருப்பை-இலுப்பை தகர்ாரு-தகராலு

1. . . . .—128 2. பக்-159