பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

நய் + பு-நம்பு, துய் +சு-துஞ்சு நய் + சு-நச்சு கால்+து-காற்று சில்-பு+அம்-சிற்பம் செவ் (செவி) + பு-செப்பு சில்+து; சிற்று-சிட்டு (சிட்டுக்குருவி) கொழ்+து-கொத்து பொழ்து-பொத்து (தெலு) நள்+பு-நட்பு துய்-கு-துாய்கு-தூங்கு: துக்கம் உய்-கு+அம்-ஊக்கம் தாழ்-தழ்+கு-தங்கு தக்கு (தெலு); தாக்கு (தாழச்செய்) மழ்+கு+ஐ-மங்கை மழ் + கு-மங்கு; மக்கு உருள்+து-உருட்டு; உருண்டு மெய்யீறுகளில் உயிர் ஒலித்துணை

க ச ட த ப ற க்களைப் போல ஏனைய ஈறுகளும் உகரத்தை ஒலித்துணையாகப் பெறுகின்றன.

பெயர்-பேரு; நீர்-நீரு நீள்ளு (தெலுங்கு) பெண்-பொண்ணு; கண்-கண்ணு கள்-கள்ளு; கொள்-கொள்ளு யகர ஈறு ஒலித்துணையாக இகரத்தைப் பெறுகிறது. நாய்-நாயி, பாய்-பாயி, பேய்-பேயி, வாய்-வாயி, நெய்-நெய்யி, பொய்-பொய்யி.

இன்றைய பேச்சுத் தமிழில் ஈற்று மெல்லின மெய்கள் ஒலிப்பதில்லை; உயிராகவே ஒலிக்கின்றன. அவ்வுயிரில் மென்மை கலக்கிறது.