பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஆய்த ஒலித் திரிபுகள்

ஆய்தம் oதால்காப்பியரால் சார்பொலிகளுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. குற்றியல் உகரம், குற்றியல் இகரம், ஆய்தம் எனும் மூன்றையும் சார்பொலிகள் என்பர்.

ஆய்தம் தனிமொழியில் வருதலோடு தொடர்மொழியில் ல, ள, வக் களின் திரிபாகவும் வருகிறது.

எஃகு, கஃசு-தனித்து வந்தது. பவ்+து-பஃது அவ் + கடிய-அஃகடிய f :த்ட்கத்” | திரி1 முள்+ தீது-முஃடீது கற்றிமை, கஃறீது என இருவகை அமைப்புகளில் ஃற். என்பது ற்ற் என்பதன் மாற்று வடிவமாகக் கொள்ளப் படுகிறது. ற்ற் என்பது வல்லொலியின் நீட்டிப்பு ஒலியாகும். “ஃற்’ என்பது நலிபு ஒலியாகும். ஃற்’ என்பன சேர்ந்தே ஒலிக்கின்றன.

இ, உ வல்லெழுத்தை ஒட்டியே அவற்றின் பின் வரும். ஆய்தமே அவற்றின்முன் வருகிறது. தமிழில் வல்லொலி களால் சொற்கள் இறுவதில்லை. அவற்றாேடு உகரம் சேர்ந்து ஒலித்துணையாக அமைகிறது. அவ்வாறே ஆய்தமும் வல் லொலியை நலிபுறச் செய்ய அமைந்த ஒலித்துணை எனக் கொள்ளலாம்.

யாண்டும் ஆய்தம் தனித்து ஒலிக்கப்படவில்லை. அதற் கென ஒரு தனி ஒலி இல்லை என்று கொள்வதே தக்கது.