பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

நன்னூல் எழுத்தியல் ஆறுமுக நாவலர் உரை இவற்றை ஆய்த அளபெடை எனக் குறிப்பிடுகிறது. ககரத்தின் நீட்சியே விலஃஃகி, இலஃஃகு என அமைந்தது என்பர்.’ .

எனவே, ஆய்தம் என்பது ல, ள, வ.க்களின் திரிபாக வும், வல்லொலிகளின் நீட்டிப்பாகவும் அமைந்தன என்று கொள்ளுதலே சால்புடைத்து. அந் நீட்டிப்பு ஒலிகளைச் செய்யுளில் விரித்தல் விகாரம் எனவும், ஆய்த அளபெடை எனவும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

பிற்காலத்தில் ஆய்தம் ககரமாகக் கருதப்பட்டது. ஏனெனில், ஆய்தம் பெரும்பாலும் ககரத்தோடு இணைந்த வழக்காகியது. -

எஃகு, அஃகு, (அல்கு) வெஃகு (வெவ்--கு) றஃகான், னஃகான், மஃகான், கம்பர் காலத்திலும் ஆய்தம் ககரமாகவே கருதப்பட்டது என்பதற்குக் கீழ்வரும் செய்யுள் சான்றாகும்.”

‘அஃதைய நினைஎமது அரண்என உடையேம் இ.தொரு பொருள்அல எமதுயி ருடன்ஏழ் மகிதலம் முழுதையும் உறுகவம் மலரோன் உகுபகல் அளவென உரைகணி பகர்வார்’

ஆய்தம் ககரத்திற்கு ஒத்த எதுகையாக வந்திருத்தல் காண்க.

ஆய்தத்தைக் ககர ஒலியாகக் கொள்ளப்பட்டதைப் போலவே யகரமாகவும் கொண்டனர்.

செய்க பொருளச்செறுநகர் செருக்கறுக்கும் எ.கதனிற் கூறியது இல்’ குறள்-759

1. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும்-பக். 282 2. த. எ. இ. அ-பக் 280.