பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திராவிட மொழிகளின் ஒலியியல்

ஒலி சொல், தொடர்நிலை எனும் மூன்று நிலைகளில் மொழி ஆராயப்படுகிறது. திராவிட மொழிகளின் ஒலி ஒப்பியலே அறிவதால் அவற்றுக் கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் புலனுகின்றன. அறிஞர் கால்டுவெல் வடமொழி ஒலிகட்கும் திராவிட ஒலிகட்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சிறப்பாகக் காட்டுவர்.

வடமொழி, திராவிட மொழி ஒலிகளுள் ஒற்றுமையும் உள்ளது; வேறுபாடும் உள்ளது. வருக்க எழுத்துகளுள் தமிழில் முதல் வரிசை எழுத்து k மட்டுமே உள்ளது. ஒலிப்பு ஒலியும் (g), மூச்சொலி கலந்த ஒலிப்பில் ஒலியும் (kh), மூச்சொலி கலந்த ஒலிப்பு ஒலியும் (gh) தமிழில் எழுத்து களாக அமையவில்லை. இவற்றுள் ஒலிப்பு ஒலி, தமிழ்மொழி யில் வழங்கிலுைம் அதற்கு எழுத்து வடிவம் தரப்படவில்லை.

பின்னண்ண வல்லொலிகள் வடமொழியில் க(k), க(g), kh, gh என வழங்குகின்றன. தமிழில் க(k) என்ற ஒர் எழுத்தே வழங்குகிறது. க, ச, ட, த, ப க்களுக்கு நான்கு வருக்க எழுத்துகள் வடமொழியில் உள்ளன.

வடமொழியில் உள்ள ஸ ஷ ஹ முதலிய உரசு ஒலிகள் (fricatives) sflyflow @&&v.

ற, ழ, ன தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துகளாகும். எ, ஒக் குறில் வடிவங்கள் தமிழில் உள்ளன. வடமொழியில் நெடில் வடிவங்களே உள்ளன.