பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தமிழ் ஒலியசை முறை

மொழிக்கு மொழி எழுத்துகள் வேறுபடுவதைப் போல ஒலியசை முறையும் வேறுபடும். தமிழ் மொழிக்கு உரிய ஒலியசை முறைகளில் சில குறிப்பிடத் தக்க சிறப்புடையன.

1. இடையின எழுத்துகளுள் யகரமும் வகரமும் மட்டுமே மொழிக்கு முதலில் வருகின்றன. ஏனைய ர, ல, ழ, ள க்கள் வருவதில்லை. வல்லெழுத்துகளுள் ட, றக்களும் மொழி முதற் கண் வருவதில்லை. -

2. யகரம் ஆவோடு மட்டும்தான் மொழி முதலில் வரும் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவார். யவனர், யூபம் என்பன சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. என்றாலும் இவை பிறமொழிச் சொற்களாகும்.

யான், யாம் என்பன நெடுமுதல் குறுகிய வடிவங்களாக வருவழி, யன், யம் என ஆகாமல் என், எம் என ஆவது யகரம் அகரத்தோடு மொழி முதலில் வருவதில்லை என்னும் விதி பற்றியே யாகும்.

3. சகரத்தோடும் ஞகரத்தோடும் அகரம் தொல்காப் யியர் காலத்தில் மொழி முதலில் வருவதில்லை. சங்க இலக் கியத்தில் சமம், சமழ்ப்பு, ஞமலி எனும்சொற்கள் வந்துள்ளன. சா என்பது குறுகிய வடிவமாக வந்தால் சத்தான் என்று வரவேண்டும். அவ்வாறு வாராமல் செத்தான் என்றே வந்துள்ளது. இதுவும் சகரம் மொழி முதற்கண் வாராது என்னும் விதிபற்றியதே என்க. -