பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

ஆய்த ஒலி பயிலும் செய்யுளின் ஒசையை நலிபு வண்ணம் என்பர் தொல்காப்பியர்.

கலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்-தொல்-செய்யுள்-221

இக் காலத்தில் ஆய்தம் அஃகு எனக் குறிக்கப்படுகிறது. நன்னூலார் காலத்திலும் இஃது அஃகு என ஒர் எழுத்தாக வழங்கப்பட்டது. அதல்ைதான் இதற்கு அங்கா முயற்சி எனக் குறிப்பிட்டிருக்கிரு.ர்.

ஆய்தத்திற்கு ஹ அல்லது க ஒலியே முதல் ஒலியாகக் கொள்ளப்படுதலால் அதன் பிறப்பிடம் தலை என நன்னூலார் குறிப்பிட்டார் போலும்!

இக் காலத்தில் காஃபி என ‘t’ ஒலியை உணர்த்த ஆய்த எழுத்துப் பயன்படுகிறது. பகரத்தின்கண் t ஒலியை ஏற்ற இஃது அறிகுறியாக நிற்கிறது.