பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

எனவே, வகரத்தின் திரிபாக அமையும் ஆய்தமும் எஃகு கஃசு போன்ற சொற்களில் வரும் ஆய்தமும் அஃகா என்பது பெறப்பட்டது.

பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் ஆய்தம் வழக்கில் இருந்தது. பல்லவர் காலத்து வேள்விக்குடிப் பட்ட யத்தில் ஈது, இஃது, இது என மூன்று வடிவங்கள் வழங்கின. கி. பி. 1077 இல் திருவெஃகா என்னும் ஊர்ப் பெயர் குறிக்கப் பட்டுள்ளது. இதற்குப் பிறகு கல்வெட்டுகளில் ஆய்த வழக்கு இல்லை என்பர்.”

அஃது, இஃது, உஃது, பஃது என்னும் சொற்களிலும் ஆய்தம் வழங்குகிறது. சாரியை வருங்கால் அவ் வாய்தம் கெடுகிறது.

அஃது - அதனை

பஃது - பதின்

சுட்டுப் பெயர் தன்முன் உயிர் வருமிடத்து அஃது எனவும், மெய் வருமிடத்து அது எனவும் வழங்குகிறது. பஃது, பத்து என்பன சூழ்நிலை ஒட்டி மாறுவதில்லை. பஃது என்பது தொல்காப்பியர் காலத்து வழக்காகும். இக் காலத்தில் பத்து என்பதே வழங்குகிறது.

ஆய்தம் ஏனைய திராவிட மொழிகளில் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். இது தமிழில் மட்டும் காணப்படும் நலிபு ஒசையாகும். ஆய் என்பது சாய் என்பதன் திரிபாகும்.

ஆய்தல்-உள்ளதன் நுணுக்கம்

‘ஓய்தல் ஆய்தல் கிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்-தொல்-உரி-32

1. A History of the Tamil Language-T. P. M. L. 148