பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

சிறு-அன்-சிருஅன் மக+அர்-மகாஅர் குரு-இ-குரீஇ நசை+இ-நசைஇ, அசை+இ-அசைஇ,

ஈருயிர் மயங்குதலைத் தவிர்க்கவே பிற்காலத்தில் உடம்படு மெய்கள் இடம்பெற்றன. தொல்காப்பியர் காலத்தில் உடம் படுமெய் பெற்ற வடிவங்கள் குறைவு.

சிறு+அன்-சிறுவன் குரு-இ-குருவி கிளி+அழகு-கிளியழகு

10. தமிழில் மொழி இடையே இரண்டு மெய்கள் மயங் குதல் உண்டு. மூன்று மெய்கள் அருகி மயங்கும். அதற்கு மேல் மெய்கள் தொடர்வதில்லை. மூன்று மெய்கள் மயங்குவதாயின் அவற்றுள் முதல் மெய் ய, ர, ழ மூன்றனுள் ஒன்றாக இருக்கும்.

சுக்கு, சங்கு, மார்பு-இருமெய் வாய்ப்பு, சேர்க்கை, வாழ்க்கை-மூன்று மெய்

11. தமிழில் நெடிலைத் தொடர்ந்தும் இரண்டெழுத் துகளை அடுத்தும் வரும் மெல்லெழுத்துகள் இரட்டிப்பதில்லை. தனிக்குறிலை அடுத்த மெல்லெழுத்துகளே இரட்டிப்பைப் பெறும்.

தான்+ஐ-தன்னை (தானே என வருவது இல்லை) தாம்+ஐ-தம்மை கண்+ஐ-கண்ணே தான், தாம் என்பன தன் தம் எனக் குறுகின.

. 12. இடையினமும் குறிலை அடுத்து வரும் பொழுதே இரட்டிப்பைப் பெறுகின்றன. ஏனைய இடத்துப் பெறுவ தில்லை.