பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அய்யர், பல்லி, அவ்வை, பள்ளம் ர, ழ யாண்டும் இரட்டிப்பைப் பெறுவதில்லை. . 13. மொழியீற்றில் நிற்பதில்லை. நிற்பின், உகரத்தை ஒலித்துணையாகப் பெறும். இதனைக் குற்றியலுகரம் என்பர். -

தற்காலத்தில் பேச்சு மொழியில் பெரும்பாலும் எல்லா ஈறுகளுமே உகரத்தை ஒலித்துணையாகப் பெறுகின்றன. ஏனைய திராவிட மொழிகளிலும் மெய்களால் சொற்கள் முடிவதில்லை என்பர்.

14. குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் யகரம் வருவழி இகரமாகத் திரியும். அவ்விகரம் குற்றியலிகரம் எனப்படும்.

நாகு+யாது-நாகியாது வரகு+ய்ாது-வரகியாது கேண்ம், சென்ம் முதலிய சொற்கள், யா என்னும் அசைச் சொல் வருமிடத்து இகரம் பெறும். அதுவும் குற்றியலிகர மாகும்.

கேண்மியா, சென்மியா இவையே பன்றி, ஏனைய ஈற்றுச் சொற்களையும் யகரம் தொடருமிடத்து இகரம் வருவதுண்டு. அதுவும் குற்றிய லிகரமே.

வேள் + யாவன்-வேளியாவன் மண் + யாது-மணிண்யாது இவ்வாறு ஒலித்துணையாக இகரம் வருதல் தமிழ் மொழிக்கண் காணப்படும் சிறப்பு நியதியாகும். இன்குரற் சீறியாழ்-(சிறுபாண். 35) ஒரியான் ஆகுவது-(அகம்) இவரியார் என்குவையாயின்-{புறம் - 201)”

1. தமிழ் எழுத்தியல் அன்றும் இன்றும் T-பக். 10.