பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பெயரா, வினையா என்பது அது தொடரில் (வாக்கியத் தில்) பெறும் இடம் நோக்கியும், காலம், வேற்றுமை உணர்த்தும் விகுதிகள் நோக்கியும் உணரப்படும்.

(2) வினை அடிச்சொற்களைப் பண்பு அடிச்சொல் (Quality root) growajib, Q&Aldi, gol@&T (action root) எனவும் இருவகையாகப் பிரிக்கலாம்.

நல்லன்-நல்-பண்பு அடிச்சொல் செய்தான்-செய்-செயல் அடிச்சொல் (3) எல்லாச் சொற்களையும் பெயரா, வினையா என்பதை அடிச்சொல்லைக் கொண்டு நிறுவ முடியாது. பலவற்றை விகுதி பெற்ற பிறகே அடிச்சொல் பெயரா, வினையா என்பதை முடிவு செய்ய முடியும்.

செய்கை-செய்+கை பெயரடிச் சொல் செய்தான்-செய்+த்+ஆன் வினையடிச்சொல் பெயர் அடிச்சொல், வினையடிச்சொல் என்று பிரிப்பதை விடப் பொருள் உணர்த்தும் பகுதிகளாகவும், விகுதிகள் சேர நிற்கும் அடிப்படை முதல் நிலைகளாகவும் இருப்பவற்றை அடிச்சொல் எனப் பொதுப்படையாகக் கூறல் தகும்.

(4) பகுதி என்பது (Stem) விகுதி, இடைநில்ை முதலியன ஒழிய நிற்பது.

வருகிருன்-வரு+ கிறு+ஆன் வரு என்பது பகுதியாம். இதனை அடிச்சொல் எனக் கூறலாம். எனினும், வரு என்பதை வர்+உ எனப் பிரித்து உகரத்தை ஒலி நயச் சேர்க்கையாகக் கொள்ளுங்கால் வர் என்பது அடிச் சொல்லாகிறது.

நிலைத்தான்-நிலை-பகுதி நின்றான்-நில்-பகுதி நிலை-நில்-ஐ-நில் அடிச்சொல்