பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

(3) அடிச்சொல்லும் விகுதியுமன்றிப் பிறிதோர் அடிச் சொல்லுடனும் சேர்ந்து பிணைந்து நின்று, பிரித்தறிய முடியாத நிலையில் உள்ள மொழி உட்பிணைப்பு மொழி (Inflectional language) storiouGolb.

. வடமொழியும் இந்தோ ஐரோப்பிய மொழிகளும் இந் நிலையின என்பர். -

தமிழிலும் சில சொற்கள் உள.

, -- }-கொண்டு வா என்பதன் பிணைப்பு காமரு -காமம் வரு என்பதன் பிணைப்பு அலமரு -அலம்+வரு p? p?

பேச்சு மொழியுள் பல சொற்கள் இவ்வாறு மருவி அமைந் துள்ளன.

கீது-இருக்கிறது என்பதன் மரூஉ ஆந்தை-ஆதன்+தந்தை என்பதன் மரூஉ சோளுடு-சோழன்+நாடு என்பதன் மரூஉ

திராவிடச் சொற்கள் இரண்டாம் நிலையாகிய ஒட்டு நிலையைச் சார்ந்திருப்பதால் அவற்றை அடிச்சொல் எனவும், விகுதிகள் எனவும் எளிதில் பிரித்தறிய முடிகிறது. அடிச் சொல் என்பது பொருள் உணர்த்தும் பகுதியாகும். விகுதி என்பது இலக்கணமும் சொல்லாக்கச் சிறப்பும் உணர்த்தும் சேர்க்கை ஆகும்.

2. அடிச்சொற்கள்

(1) தமிழ்ச் சொற்களுள் பல்வற்றின் அடிச்சொற்கள் பெயருக்கும் வினைக்கும் பொதுவாக நிற்கின்றன.

பூ-பெயர்: பூத்தது-வினை காய்-பெயர்: காய்த்தது-வினை கனி-பெயர்; கனிந்தது-வினை அடி-பெயர்: அடித்தான்-வினை