பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

இரண்டு என்பதன் அடை வடிவங்களான இரு, ஈர் என்ப வற்றை ஒட்டி ஒப்புமை ஆக்க நயத்தால் ஒரு ஒர் என்ற வடிவங்கள் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்தைப் பேராசிரியர் எமனேவ் வெளியிட்டுள்ளார்.

2. இரண்டு

தமிழ்-இரண்டு; மலையாளம்-இரண்டு, கன்னடம் -எரடு; தெலுங்கு-ரெண்டு.

அடைவடிவங்கள் : தமிழ் - இர், ஈர்; கன்னடம், தெலுங்கு-இ

ஓரினமாதல் விதிப்படி இர் என்பதன் ரகரம் கெட்ட வடிவங்கள் ஏனைய திராவிட மொழிகளில் வழங்குகின்றன.

தமிழ் கன்னடம் தெலுங்கு இருவர் இப்பரு இத்தரு இருபது இப்பத்து இரவை

அடையாகுங்கால் உயிர்முன் நீட்சியும், மெய்ம்முன் குறுக் கமும் ஆகின்றன. இம் மாற்றங்கள் திராவிட மொழி அனைத் திலும் பொதுவாகக் காணப்படுகின்றன.

தமிழ் : ஈரறிவு; இருமருந்து மலை : ஈரார்; இருநாழி கன் : ஈரேளு; இர்க்குள (இரு குடும்பங்கள்) தெலு : ஈரேனு (ஈரைந்து); இருவுட்டி (இரு புட்டி

அளவு): | இரு என்ற பகுதியிலிருந்து தமிழில் இருவர், இருமை, முதலிய சொற்கள் தோன்றியுள்ளன்.

‘இரண் என்பது இரண்டு என்பதன் அடிச்சொல்லாக இருக்கலாம். இரணை’ என்பது நற்றிணையில் இரண்டைக்

1. Emeneau papers-L1. 141 . 8. D. N. பக். 147.