பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மலையாளம் : ஒன்று என்பதன் திரிந்த வடிவமாகிய ஒன்னு என்பதே மலையாளத்தில் எண்ணுப் பெயராக வழங்குகிறது. ஒரு ஒர் என்பன அடை வடிவங்களாகும்.

தெலுங்கு ஒகடி என்பது ஒன்றை உணர்த்தும். அடை யாகுங்கால் ஒக என அமையும். பால் விகுதி ஏற்கும் வடிவும் இதுவே யாகும்.

ஒகடு (ஒருவன்) ஒகதி (ஒருத்தி) ஒண்டு என்ற வடிவமும் உண்டு. இஃது அடையாகுங் கால் ஒண்டி என முடிகிறது.

ஒண்டி வாடு” கன்னடம்: ஒன்று என்றே கன்னடத்தில் வழங்குகிறது. ஒருவன் என்னும் தமிழ் வடிவுக்கு நிகராக ஒர்பது, ஒப்பது எனவும், ஒருத்தி என்பதற்கு நிகராக ஒப்பளு எனவும் வழங்கு கின்றனர்.

திராவிட மொழிகளில் ஒரு ஒர் ஒன், ஒக, ஒண், ஒற் என்பன அடிச் சொற்களாக விளங்குகின்றன. தமிழில் அடையாகுங்கால் ஒரு, ஒர் என மாற்று வடிவங்கள் அமை கின்றன. உயிர்முன் ஒர் என்பதும் மெய்ம்முன் ஒரு என்பதும் அட்ைக்ளாக அமைகின்றன.

ஒர் உயிர்; ஒரு நாள் சங்க காலத்தில் இவ்வாறு சூழ்நிலைக்கேற்ப மாறி வர வேண்டும் என்ற நியதி இல்லை. .

ஒர் தேர் அகம். 7/11 ஒர் பெருங்களிறு புறம். 140/8 ஓர் என்பது மெய் வருமிடத்தும் வந்துள்ளது. ஒன்று என்பதன் அடிச் சொல் ஒன் என்பதேயாகும். அஃதப்படியே அடையில் இடம் பெருமல் ஒரு, ஒர் எனத் திரிந்தது. . -

1. D. N. u, 144. .

—e