பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எண்ணுப் பெயர்கள்

எண்ணுப் பெயர்களின் அடிச்சொற்கள் தனித்து நிற்கும் பொழுது ஒருவகை வடிவும், அடையாகுங்கால் மற்றாெரு வடிவும் பெறுகின்றன.

தமிழைப் பொறுத்த வரையில் பொதுவாக அடையாகும் பொழுது குறுகிய வடிவும், தனித்து வரும் பொழுது நெடில் வடிவும் பெறுகின்றன. .

1. ஒன்று

ஒன்று என்பது தமிழ் எண்ணுப் பெயராகும். அது பேச்சு வழக்கில் ஒண்ணு எனத் திரிந்து வழங்குகிறது.

ஒரு, ஒர் என்பன அடையாகும் வடிவங்கள். இவ்வடி வங்களே பாலீறு ஏற்று உயர்திணைப் பெயர்களாக முடியும்.

ஒருவன், ஒருத்தி, ஒருவர்.

ஒவ்வொன்று, ஒன்பது என்பவற்றுள் ஒவ்வும் ஒன்னும் அடைகளாகும்.

ஒற்றை என்னும் வடிவத்தை நோக்க ஒன்று என்பதே தொல்வடிவம் என்பது புலகுைம். இதனுள் ‘று என்பதை ஆக்க விகுதியாகக் கொண்டால், ஒன் என்பதே அடிச்சொல் லாகும்.

  • தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற சொல் வழக்குத் தெலுங்கை ஒட்டி அமைக்கிருக்கலாம்;