பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மொஹெஞ்சொ - தரோ


களையோ, பழங்களையோ பறிப்பது வழக்கம். சிலர் மரத்திற்கு முதலில் தாலி கட்டிய பிறகே பெண்ணுக்குத் தாலி கட்டுதல் வழக்கம்.

ஒரு முத்திரையில் இரு உருவங்கள் இரண்டு மரங்களை நடுவதற்கு ஏந்தி நிற்கின்றன. அவைகட்கு இடையில் மரதேவதை உருவம் ஒன்று நிற்கின்றது. இங்ஙனம் மரங்களை நடுதல் தூய செயல் என்று நம்மவர் நினைத்தல் நெடுங்காலப் பழக்கமாகும்.

ஆற்று வணக்கம்

வாயில் சிறு மீன்களை வைத்துள்ள முதலை, ஆமை போன்ற உருவங்களை ஆறுகளுடன் சேர்த்துப் பொறிக்கப் பட்டுள்ள முத்திரைகள் கிடைத்துள்ளன. இவற்றால் அக்கால மக்கள் ஆற்று வணக்கம்[1] செய்து வந்தனர் என்பதை நன்கு அறியலாம்.

பலி இடும் பழக்கம்

சிந்துவெளி மக்கள் மர தேவதைகட்கும் பிற கடவுளர்க்கும் வெள்ளாடு, எருமை முதலியவற்றைப் பலி யிட்டனர். சிந்து வெளியிற் பெரும்பாலும் வெள்ளாடே பலியிடப் பட்டதாம்.[2]

தாயித்து அணிதல்

மண் தாயித்துக்களே மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டன. அவை தேய்ந்து காணப்படுகின்றன. தாயித்துக்களில் காணப்படும் உருவங்கள் சமய சம்பந்தமான பல நிகழ்ச்சிகளைக்


  1. ஆற்றில் புதுவெள்ளம் வரும்பொழுது ஆண்டுக்கொரு முறை ஆற்றை வணங்குதல் பண்டைத் தமிழர் மரபு என்பதைப் பரிபாடலால் அறிக.
  2. முருகப்பெருமானுக்கு ஆட்டைப்பலியிடல் பண்டைத் தமிழர் மரபு. இதனைத் திருமுருகாற்றுப்படையிற் காண்க, காளி தேவிக்கு எருமைப் பலி இடுதல் இன்றும் காணலாம்.