பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

245


வழக்கங்களையும் பிறவற்றையும் தூய முறையிலும் மிகப் பழைய வடிவத்திலும் பழந் (சங்கத்) தமிழ் நூல்களிற் காணலாம்”[1]

“ஆஸ்ட்ரேலிய மொழிகளாகிய முண்டா முதலிய மொழிகள் திராவிட மொழிகளாற் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளன. வட மொழியும் அங்ஙனமே திராவிட மொழிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று தென் இந்தியாவில் உள்ள திராவிடர், மிகப்பழையகாலத்தில் வடஇந்தியாவிலும் இருந்திருத்தல் வேண்டும் என்பது உறுதிப்படுகிறது”.[2]

“எ, ஒ என்பன பாலி மொழியிற் காணப்பட்டாலும், பல்லிடத்துப் பிறக்கும் எழுத்துகளை நாவிற் பிறப்பனவாக உச்சரித்தமையும் ஆரியர்க்கு முற்பட்ட மக்களுடைய மொழியையும் பழக்கத்தையும் காட்டுவன. இவை இன்றைத் திராவிட மொழிகளிற் காணப்படலால், இத்திராவிடர் முன்னோரே வட இந்தியாவிற் பாலி மொழி பேசினவராதல் வேண்டும்.[3]

கன்னட அகராதியைத் தொகுத்த டாக்டர் கிட்டெல் என்பார், வடமொழியிற் கலந்துள்ள நூற்றுக்கணக்கான திராவிடச் சொற்களைப் பட்டியலாகத் தந்துள்ளார். பஞ்சாபில் ஆரியர் இருந்தபோது செய்யப்பட்ட சாண்டோக்ய உபநிடதத்தில் மதசீ (Matachi) என்னும் சொல் காணப்படுகிறது. இச்சொல் இன்றும் குருநாட்டிலும் தார்வாரிலும் வழங்குகிறது. இது கன்னடத்தில் மிதிசெ (Midiche) என வழங்குகிறது. இது தூய திராவிடச் சொல் ஆகும். இத்தகைய பல சொற்கள் வடமொழியில் இருத்தலையும் பலுசிஸ் தான்த்தில் உள்ள ப்ராஹுயி மொழியிற் பேரளவு திராவிடம் இருத்தலையும் நோக்க, ஆரியர் வருமுன் வடஇந்தியாவில் திராவிடர் இருந்தனர் என்


  1. Dr.S.K.Chatterji’s ‘Origin and Development of the Bengali Language’, Vol. H. pp. 28, 29, 41-45.
  2. ‘Pre-Aryan and Pre-Dravidian in India’, pp.49,86.
  3. Dr.R.G.Bhandarkar’s ‘Collected Works’, Vol.IV. p.293.