பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

253


கோசல தேசத்தார் பேசிய மொழி’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, அநுமன் சீதையிடம் அவளுக்கு நன்கு தெரிந்திருந்ததும் கோசல நாட்டு மொழியானதுமான தமிழிலேயே பேசினான் என்பது தெளிவாம்?....” என்று கூறி, இம்முடிபை நிலைநாட்டற்கு உரிய பல அரிய சான்றுகளைச் ‘செந்தமிழ்’ இதழாசிரியராகிய திரு. நாராயணையங்கார் அவர்கள் பலபடியாக விளக்கிச் செல்கின்றனர்.[1]

“இன்றைய தமிழ் மொழியும் தமிழ் நாடும் வேத கால நாகரிகத்திற்கு நெடுந் தொலைவில் இருக்கின்றன எனினும், தமிழின் பழைய மொழியான, திராவிடம் வேத காலத்தில் ஆரியர்க்கு அண்மையிலேயே இருந்து, வேத கால மொழியிலேயே மாற்றத்தை உண்டாக்கிப் பிற்காலப் பிராக்ருத மொழிகளையும் இன்றைய வட இந்தியா ஆரிய மொழிகளையும் உண்டாக்கிவிட்டதென்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியவராக இருக்கின்றோம்”

பிற சான்றுகள்

“சிந்துவெளி மக்கள் ஆரியர்க்கு முற்பட்டவரே (பெரும்பாலும் திராவிடராக இருக்கலாம்). ரிக்வேதம் குறிப்பிடும் ‘தாஸ்யுக்கள் அசுரர்’ என்பவர்கள் அவர்களே ஆவார்கள். அவர்கள் கலைகள் ஆரியரால் அழிவுண்டன. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த யோகியர் படிவங்கள் அல்பைனரை ஒத்துள்ளன.... சிந்துவெளி நகரங்களிலும் பலுசிஸ்தானத்தில் உள்ள ‘நால்’ என்னும் இடத்திலும் கிடைத்த மண் பாண்டங்கள், கருவிகள், சித்திர எழுத்துகள் போன்றவை டெக்கானில் கிடைத்துள்ளன. டெக்கான் சவக்குழிகளிற் கிடைத்த பாண்டங்களின் மீது காணப்

2. Presidential Address (Telugu Section) of K.Ramakrishniah at the Tenth All-India Oriental Conference, Tirupadi. - The Annals of Sri Venkateswara Oriental Institute, Vol.I.Part 2, p.102.


  1. Vide his article in Sentamii (1939-1940) - Published by the Madura Tamil Sangam.