பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடங்கள்

69


எளியவர் இல்லங்கள்

சிறிய இல்லங்கள் என்பன நான்கைந்து அறைகள் கொண்டுள்ளன. இவை 900 செ.மீ நீளமும் 810 செ. மீ. அகலமும் உடையன. இவை அனைத்தும் செங்கற்களைக் கொண்டே அமைத்தவை ஆகும். இவற்றின் தரை சாணத்தால் மெழுகப்பட்டு வந்தது. இங்ஙனம் செங்கற்களைக் கொண்டு உறுதியுடைய இல்லங்கள் கட்டி வாழ இயலாத மக்கள், நகரத்தின் வெளிப் புறத்தில் உறுதியற்ற பொருள்களைக் கொண்டு குடில்கள் அமைத்து வாழ்ந்தனராதல் வேண்டும்.

பெரிய முற்றமுடைய இல்லங்கள்

சில பெரிய கட்டிடங்களின் நடுவில் பெரிய-அகன்ற முற்றம் இருக்கின்றது. அதனைச் சூழப் பல அறைகள் அமைந்துள்ளன. அவ்வறைகள் இக்காலத்துப் பெரிய அறைகள் போன்றவை அல்ல; எனினும் காற்றோட்டம் கொண்டனவாகவே அமைந்துள்ளன. ஒவ்வோர் அறையிலும் காற்றும் வெளிச்சமும் புகத் தக்கவாறு சாளரம் அமைந்துள்ளது. காற்றோட்டம் நன்கு அமைந்திருக்கத் தக்கவாறு வீட்டின் வாயிற்படியும் கூரையும் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. இத்தகைய இல்லங்கள் சென்னையில் வண்ணாரப்பேட்டையிலும் இராயபுரத்திலும் காணலாம். சிந்து மாகாணத்திலும் பல இடங்களில் இத்தகைய அகன்ற முற்றமுடைய இல்லங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.

பல குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள்

பெரிய வீடுகளிற் சில இடையே நெடுஞ்சுவர்கள் வைத்துப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய இல்லங்கள் உடன் பிறந்தோர் பிரிந்து வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்டவை ஆகும். சில இடங்களில் சிலவீடுகள் அவற்றின் தாய்ச் சுவர்களுக்கும். அடுத்த வீட்டுச் சுவர்களுக்கும் இடையில் சிறு இடைவெளி விட்டுக்