பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மொஹெஞ்சொ - தரோ


கட்டப்பட்டுள்ளன. இவற்றால் அக்கால மக்கட்குள் சுவர்களால் ஏற்படும் தொல்லை இருந்தது என்பதும், அதனை நீக்கவே இம்முறை கையாளப்பட்டது என்பதும் எளிதிற் புலனாகின்றன. இத்தகைய பெரிய வீடுகளில் கூலங்களைச் சேமித்துவைக்கும் களஞ்சியங்கள் தரையிற் பதிக்கப்பட்டு இருந்தன. சில இல்லங் களில் மாடங்களும் சுவர் அறைகளும் அமைந்துள்ளன. சில வீடுகளில் 1ற் கலன்கள் வைத்தற்குரிய மரப் பெட் கங்கள் (Cup boards) சுவர்களிலேயே இணைக்கப்பட்டுள்ளன.

செல்வர் தம் மாட மாளிகைகள்

இவை, இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட அடுக்குகளு - முடைய மாளிகைகள் ஆகும். இவை பெரிய கூடங்கள், அகன்று நீண்ட தாழ்வாரங்கள், அகன்ற முற்றங்கள், இடை கழிகள், சிறிய பெரிய வாயில்கள், பல அறைகள் இவற்றை உடையனவாகும். இவற்றின் மேன்மாடங்கள் செங்கல் தள வரிசை உடையன. சில மாளிகைகளில் உள்ள மேன்மாடங்களில் படுக்கை அறைகள் உள்ளன; வேறு சில மாடங்களில் படுக்கை அறைகள், நீராடும் அறைகள், மலங்கழிக்க ஒதுக்கிடம் முதலியன அமைந்துள்ளன. மேன்மாடங்கட்குச் செல்லும் படிக்கட்டுகள் பல இன்றும் நன்னிலையிற் காண்கின்றன. அவை இன்று நம் வீடுகளில் உள்ள படிக்கட்டுகள் போலவே இருக்கின்றன. படிக்கட்டு இல்லாத மாடங்கள் சில காணப்படுகின்றன.அவற்றுக்கு மர ஏணிகள் பயன் பட்டனவாதல் வேண்டும். படிக்கட்டுகள் பெரும்பாலான வீடுகளில் தெருப்புறமே அமைந்துள்ளதை நோக்க கீழ்க் கட்டிடத்தில் வேறு பலர் குடியிருந்தனர் என்று எண்ண வேண்டியிருக்கிறது. சில வீடுகளில் படிக்கட்டுகள் உட்புறத் தாகவே அமைந்துள்ளன. ஒரு மாளிகையில் இரண்டு படிக்கட்டுகள் ஒன்றுக்கொன்று அண்மையிலேயே அமைந் துள்ளன. படிக்காக விடப்பட்ட பலகை ஒவ்வொன்றும் 21 செ. மீ அகலமும் 5.5 செ. மீ. கனமும் உடையது.