பக்கம்:யயாதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி 3? கண்னே, உன் புத்திக்கு மெச்சினேன்! (முத்த மிடுகிருன்.) திடீரென்று தெய்வயானை வெளியே வருகிருள். சன்மிஷ்டை! உன் புத்திக்கு நானும் மெச்சினேன்!. ஆஹா! இப்படியா இருந்தது உண்மை ? - சன் மிஷ்டை! நீ பொய் பேசுகிறதில்லை யல்லவா? உன்னே மஹாராஜா கண்ணெடுத்தும் பார்க்கிறதில்லை யல்லவா? ஓர் தபசி விபூதி கொடுக்க நீ மைந்தனேப் பெற்றனேயல்லவா?-சீ உன்னே யிகழ்ந்து பய னென்ன? நீ உன் குலத்தின் குணத்தைக் காட்டி விட்டாய்.-இதோ சந்திரகுல சிகாமணி யிருக்கிருர், வியாழ பகவானுல் புகழப்பட்ட யயாதி மஹாராஜா ! இவன்ர யல்லவோ கேட்கவேண்டும் ! யiாதி ராஜனே, என்ன காரியஞ் செய்தீர்? சந்திரகுலத் தரசர்க்கென்ன நீதியிருக்கப்போகிறது? வம்சத்தின் குணந்தானே! குருவின் பத்தினியுடன் சேர்ந்த சந்திர னுண்டாக்கிய குலத்திலுதித்த நீர், கூறிய மொழியினின்றுந் தவறியது, ஒர் ஆச்சரியமோ? பிரான நாயகி, நான் சொல்வதைக்கேள். பிராணநாயகி, என்று இன்னுெரு முறை என்னே அழைக்கவேண்டாம். அதோ கிற்கிருள் உம்முடைய பிராணநாயகி.-சன்மிஷ்டை, ஏன் உனக்கு விபூதி மந்திரித்துக் கொடுத்து கர்ப்பமுண்டாக்கிய வாய்மை தவருக தவ சிரேஷ்டர் இதோ கிற்கிறரே, அவரைப் பாராது ஏன் கலைகுனிந்து நிற்கிருய்? இன்னும் அதிகமாக விபூதி மந்திரித்துக் கொடுக்கச் சொல்! தெய்வயானை, நான் வாய்மை தவறினேன், உண் மையே. ஆயினும், நான் சொல்வதைக் கேள். நான் இனி உமது சொல்லேக் கேட்கவேண்டிய தில்லை. யார் கேட்கவேண்டுமோ அவர்களிடங் கூறும். இனி உம்முடைய அரண்மனையில் ஒரு கடினமும் இரேன் இந்த கணமே என் பிதர் விடம் போகவேண்டும்.தெய்வயானை, வீணுகக் கோபித்துக்கொள்ளாதே. இப்பொழுது உன் பிகாவிடம் போய் இதைக் கூறு வையாயின், அவர் என்னேச் சபிப்பார். அது உனக் குச் சந்தோஷத்தை புண்டாக்கப் போகிறதோ ? அத்தீங்கு உன்னேயுஞ் சாருமன்ருே ? வேண்டாம், வேண்டாம், அவசரப்படாதே. (அவள் காத்தைப் பற்றப்போகிமுன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/39&oldid=885913" இலிருந்து மீள்விக்கப்பட்டது