உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரால்? யாரால்? யாரால் குதூகலிக்கிறார் நண்பர்! அதனால்தான் அண்ணா அவர்கள் பிரிவினைக் கொள்கையை விட்டதற்கான காரணத்தை இவர் நரகல் நடையில் எழுதிக் காட்டுகிறார்! பாவம்; இவருக்குப் பழகிப் போன நடை அது. இந்து மதக் கடவுள்கள் எனச் சொல்லப்படுவோர் மீ. மீது ஆபாசக் கதைகளை எழுதிக் குவித்திருப்போர் ஆபாச மழை பொழிந்தவர்களா? அந்தக் கதைகளை நம்பாதே என்று காடுமேடு சுற்றிக் கடும் பயணம் மேற்கொண்டு சூறாவளிப் பிரச்சாரம் செய்த சுயமரியாதைச் சுடர் பெரியார் ஆபாச மழை பொழிந்தவரா? அரிக்கும் அரனுக்கும் -அதாவது ஆணுக்கும் ஆணுக் கும் பிறந்தவர்தான் அய்யனார் என்பது ஆபாசமில்லையாம்! அதை ஏற்க மறுப்பது ஆபாசமாம்" தாருகாவனத்து ரிஷிபத்தினிகளைச் சிவனார் கற்பழித்த கலை ஆபாசமில்லையாம்; அதை ஆபாசம் எனக் கூறியது ஆபாசமாம்! நாரதர் பெண்ணுருக் கொண்டு கண்ணனைக் கூடி அறுபது ஆண்டுகள் என்ற பிள்ளைகளை பெற்றது ஆபாச் மில்லையாம்! அதை ஆபாசமென அறிவிப்பது தான் ஆபரசமாம்! முழு நிர்வாணமாக வந்து அன்னம் பரிமாறுக என்று னுசூயாவைப் பார்த்து மும்மூர்த்திகளும் கோரியது ஆபாசமில்லையாம்; இந்த முட்டாள்தனங்களை நம்பாதீர் என முழக்கியது ஆபாசமாம்! திரைப்படங்களைத் தி.மு.கழகம், நாத்திகப் பிரச்சாரத் திற்குப் பயன்படுத்தியதாம்! 'சோ' தான் சொல்லுகிறார்! அண்ணா எழுதிய வேலைக்காரி படத்தில் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கருத்துதான் வலியுறுத்தப் பட்டது! “கோயில் கூடாதென்பதல்ல; கோயில் கொடியவர் கனின் கூடாரமாக இருக்கக்கூடாது" என்றுதான் பராசக்தி படத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது!