பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. விண்மீன்களின் இடையில் ஞாயிற்றின் தோற் றப் பாதையைக் காட்டும் மாதிரி உருவம் : 60 செ. மீ. நீளமும், 8 செ. மீ. அகலமுமுள்ள ஒரு தாளின்மீது இராசியின் அடையாளங்கள் சரியான ஒழுங்குமுறைப்படி வரையப்பெறுகின் றன. தாளின் முனைகள் இரண்டும் பசையால் ஒட்டப்பெற்று ஒன்று சேர்க்கப்பெறுகின்றன; இப்பொழுது இராசியின் விண்மீன் மண்டலங் களுடன் சேர்ந்த தொடர்ச்சியாகவுள்ள ஒரு கண்ணிபோல் அது அமைகின்றது. அதன் பிறகு அக்கண்ணி ஒரவாக்கில் நிறுத்தப்பெற்று கிட்டத்தட்ட 18 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு வட்டத்தில் ஓர் அட்டையின் அடித்தளத் துடன் சேர்த்து ஒட்டப்பெறுகின்றது. நடுவில் 2 1. இளவேனிற் காலம் 2. மாரி காலம் 3. இலையுதிர் காலம் 4. கோடிை காலம் வைக்கப்பெற்றுள்ள ஒரு குட்டையான மெழுகு வத்தி ஞாயிற்றினை உணர்த்துகின்றது. இராசி யின் அடையாளங்களுடன் இணை எதிராக வுள்ள பருவங்கள் அடிதள அட்டையின் வெளிப் புறத்தில் குறிப்பிடப்பெறுகின்றன. ஒரு கயிற்றில் தொங்கவிடப்பெற்ற ஒரு புன்னைக் கொட்டை அல்லது வேறு பொருள் அக் கயிற் றின் சுற்று பிரிவதற்கேற்பச் சுழன்று, சுழன்று கொண்டிருக்கும் பூமியை உணர்த்துவதற்குத் துணை செய்யும். 3. கிரகணம் எப்படித் தோ ன் று கி ன் ற து என்பதை விளக்கும் மாதிரி உருவம்: - ஒரு கறுப்பு நிறமுள்ள அட்டையில் 5 செ.மீ. குறுக்களவுள்ள ஒரு வட்டமான துளையின் வழி XI B. ஞாயிறும் விண்மீன்களும் யாக ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் ஒரு வெண் ணிற மின்விளக்கிளுல் ஞாயிறு உணர்த்தப் பெறுகின்றது. இந்தத் துளையினைச் சுற்றி ஒரு சிவப்பு வண்ணக் கோலால் ஒளி வளையம் (corona) வரையப்பெறுகின்றது. ஒரு தைய லூசியின்மீது ஏற்றப்பெற்றுள்ள 2.5 செ. மீ. குறுக்களவுள்ள மரத்தாலாகிய ஒரு பந்து மதியாக அமைகின்றது. இந்த ஆய்கருவிக்கு திரையில் பெரிய குண்டுசித் துளைகளில் ஏதாவதொன்றன் வழியாக உற்றுநோக்குவோர் கிரகணத்தைக் காண்கின்றனர். முழுக் கிரகணம் இருக்கும் நிலை யில் ஒளி வளைய வட்டம் மட்டிலும் கண்ணுக்குப் முன்னுள்ள காணப்பெறும் பல புலனுகின்றது. ஆய்கருவியின் முன்புறம் பொருத்தப்பெற்றுள்ள மிதிவண்டியின் ஓர் உறுதியான ஆரைக்கால் கம்பியால் (spoke) மதியின் நிலை சரிப்படுத்தப்பெறுகின்றது. 4. ஞாயிற்றுக் கிரகணத்தை மேற்கோளால் விளங்கச் செய்தல் : ஒரு சிறிய நாணயத்தை ஒரு கண்ணிலிருந்து ஒரு சில அங்குல தூரத்தில் வைத்துக்கொண்டும் மற்ருெரு கண்ணை மூடிக்கொண்டும் அறையின் மேல் தளத்தில் ஒளி விடும் ஒரு மின் விளக்கினை நோக்குக. பெரிய மின்குமிழ் மிகத் தொலைவி லுள்ளது; அது ஞாயிற்றினை உணர்த்து கின்றது. உங்கள் கண்ணருகிலுள்ள சிறிய நாணயம் ஞாயிற்றிற்கும் பூமிக்கும் இடையில் வந்து கொண்டிருக்கும் மதியினை உணர்த்து கின்றது. அந்தச் சிறிய நாணயம் மேல்தளத் திலுள்ள ஒளிவிடும் குமிழை முற்றிலும் மறைத்து உங்கள் கண்ணின்மீது நிழலை விழச் செய்வதை நீங்கள் உற்றுநோக்குவீர்கள். - 5. ஞாயிற்றுப் புள்ளிகளை உற்றுநோக்குதல்: முன்னொரு சோதனையில் நீங்கள் அமைத்த தொலைநோக்கியைப் பயன்படுத்துவீர்களாக, அது ஞாயிற்றினை நேராக நோக்கி யிருக்குமாறு அதை அமைத்திடுக கண்ணருகு-வில்லைக்கு அப்பால் வைக்கப்பெற்றுள்ள ஒரு வெண்ணிற அட்டையின்மீது ஞாயிற்றின் பிம்பம் தெளிவாக வும் ஒளிர்வுடையதாகவும் விழுவதற்கேற்றவாறு 84.