பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காற்று வெளியை அடிைக்கின்றது என்பதைக் காட்டுதல் 3. பாதி நீர் நிறைந்துள்ள ஒரு பெரிய கண்ணுடிச் சாடியில் ஒரு தக்கையினை மிதக்க விடுக. தக்கையின்மீது ஒரு நீர் பருக உதவும் கண்ணுடிப் பாத்திரத்தின் வாயைத் தலைகீழாக வைத்துக்கொண்டு அ த இன க் கீழிறக்குக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? கண்ணுடிப் பாத்திரத்தின் அடிமட்டத்தில் ஒரு துண்டுத் தாளினே இறுக்கமாக இருக்குமாறு திணித்து வைத்து இதனைத் திரும்பவும் செய்க. தாள் நனைகின்றதா? 4. நீர்ப் பொருட்காட்சிப் பெட்டிக்குரிய பாத்திரம் அல்லது ஒரு பெரிய நீர்த் தொட்டி யினைக் கைவசப்படுத்தி, கிட்டத்தட்ட அதனை நீரால் நிரப்புக. ஒரு கண்ணுடிப் பாத்திரத்தின் வாய் தலைகீழாக இருக்குமாறு வைத்துக் கொண்டு அந்த நீர்த் தொட்டியில் இறக்குக. மற்ருெரு கையில்ை மற்ருெரு கண்ணுடிப் பாத் திரத்தைத் தொட்டியில் இறக்குக. அதனுடைய வாய் மேற்பக்கமாகச் சாய்த்த நிலையில் இந்தக் கண்ணுடிப் பாத்திரம் நீரினல் நிரம்பட்டும். முதற் கண்ணுடிப் பாத்திரத்திற்குமேல் இரண் டாவது கண்ணுடிப் பாத்திரத்தை அதன் வாய் தலைகீழாக இருக்குமாறு பிடித்துக்கொள்க. முதற் பாத்திரத்தை மெதுவாகச் சாய்த்து அதி லுள்ள காற்று மெதுவாகத் தப்பிப் போகுமாறு செய்க. முதற் பாத்திரத்திலிருந்து காற்றினை இரண்டாவது பாத்திரத்தில் நிரப்புக, காற்றைப் பற்றி இஃது எதனைக் காட்டுகின்றது ? 5. நீர்ப் பொருட்காட்சிப் பெட்டிக்குரிய பாத்திரத்தில் ஓர் உயரமான கண்ணுடிச் சாடி யினை வைத்திடுக. அதன் வாய் தலைகீழாக அடி மட்டத்தில் நின்ற நிலையில் அது நீரால் நிரம்பி யிருக்கட்டும். ஓர் இரப்பர்க் குழல் அல்லது ஒரு சோடா பருக உதவும் வைக்கோல் புற் குழலைப் புட்டியின் ஒரத்தின்கீழ் வைத்து மெதுவாகக் குழலினுள் ஊதுக. காற்றைப் பற்றி இஃது எதனைக் காட்டுகின்றது ? 6. ஆழமற்ற நீருடன் கூடிய தட்டொன்றில் நீரால் நிரப்பப்பெற்றுள்ள ஓர் உயரமான கண் ணுடிச் சாடியைக் கவிழ்த்திடுக. முதலில் சாடியை நீரால் நிரப்பியும், அதன் வாயில் ஒரு கண்ணுடி அல்லது அட்டைத் துண்டினை வைத்தும் அதன் பிறகு அதனை நீருள்ள தட்டில் கவிழ்த்தும் இது செய்யப்பெறலாம். தட்டில் நீரின் அடியில் அந்த மூடியை நீக்குக. சாடியின் விளிம்பினை ஒரு சிறிது உயர்த்தி அதன்கீழ் மருந்து சொட்டும் குழல் ஒன்றன் முனையை வைத்திடுக. மருந்து சொட்டும் குழலின் குமிழை அழுத்தி என்ன நேரிடுகின்றது என்பதை உற்றுநோக்குக. இது பல தடவை கள் திரும்பத் திரும்பச் செய்யப்பெறலாம். காற்றினைப்பற்றி இஃது என்ன காட்டுகின்றது? 90