பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ று க் க ம க ப் பொருந்தக்கூடிய கக்கை அல்லது இ ர ப் பர் அடைப் பானுடன் கூடிய ஒரு புட்டியைக் கைவசப் படுத்துக. ஒரு சிறு காற்றுக் குமிழைத் தவிரப் புட்டியினை நீரால் நிரப்புக. .ே காற்றிற்கு எடிை உண்டு என்பதைக் காட்டுதல் புட்டியை அ த ன் பக்கவாட்டில் திருப்பித் தக்கையின் மீது அழுத்துவதால் காற்றுக் குமிழை மறையுமாறு செய்க. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? காற்றினைப்பற்றி இஃது என்ன காட்டுகின்றது ? C. காற்றிற்கு எடை உண்டு என்பதைக் காட்டுதல் 1. ஒரு மீட்டர் கோல் அல்லது கெசக் கோல் போன்ற ஒரு நீண்ட கோலின் சரியான நடு மையத்தின் வழியாக ஒரு மெல்லிய ஆணியை அடித்திடுக. இரண்டு கண்ணுடிப் பாத்திரங் களின் விளிம்புகளில் அந்த ஆணியைத் தாங்கச் செய்து அந்தக் கோலினைச் சமநிலைப்படுத்துக. ஒரு சிறிய நீளமுள்ள கம்பியைக்கொண்டு ஓர் எடையேறியை (Rider) அமைத்து அக் கோலின் சமநிலையாவதற்கு எடை தேவைப் படும் முனையில் அதனை வைத்திடுக. கோல் கு ைற பாடி ன் றிச் சமநிலையாகும்வரையில் எடையேறியினை நகர்த்துக. கோலின் ஒரு முனையில் ஓர் இரப்பர்ப் பலூனையும் ஓர் இரப் பர்ப் பட்டையினையும் தொங்கவிடுக. கோலின் மற்ருெரு முனையில் ஏதாவது எடையினைக் கொண்டு பலூனுக்குச் சரியாக ஈடுகட்டுக. கோலில் பலூனும் அதற்கு ஈடாக வைக்கப் பெற்ற எடையும் வைக்கப்பெற்ற இடங்களை அடையாளம் செய்திடுக. பலூனை அகற்றி ஒரு மிதி வண்டியின் பம்பினேக் கொண்டு அதனை உப்பச் செய்க. ஒர் இ ப் பர் ப் பட்டையினுல் அதனே முடுக. அடுத்து, பலூனை யும் அதன் ஈடான எடையையும் அவை முன் னிருந்த இடங்களிலேயே தொங்கவிடுக. நீங் கள் என்ன காண்கின்றீர்கள்? காற்றினைப்பற்றி இஃது எதனைக் காட்டுகின்றது? எனினும், பலூன் அதன் பரிமாணத்தில் அதிகரித்து, அதன் காரணமாக அதிகக் காற்றை இடம் பெயரச் செய்கின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த விளைவினல் நேர்ந்த அதிகரித்த மிதக்கும் தன்மை, சோதனையைச் சிக்கலாக்குகின்றது ஆளுல் பலூன் மிகக் கெட்டியாக ஊதச் செய்யப்பெற்ருல் எடை யின் அதிகரிப்பு உற்றுநோக்கப்பெறலாம். மிதி வண்டி வால்வு பொருத்தப்பெற்ற உலோகத் தாலான வெந்நீர்ப் புட்டி பலூனுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்பெற்ருல் இந்த இக்கட்டு தவிர்க்கப்பெறலாம். D. காற்று அமுக்கத்தைத் தருகின்றது என்பதைக் காட்டுதல் ஒரு நீர்பருகப் பயன்படும் கண்ணுடிப் பாத்திரத்தின் விளிம்புவரை நீரிஞல் நிரப்புக. அதன்மீது ஒர் அட்டைத் துண்டினே வைத் திடுக. கண்ணுடிப் பாத்திரத்துடன் சேர்த்து அட்டையைப் பிடித்துக்கொண்டு பாத் திரத்தைத் தலைகீழாகத் திருப்புக. அட் டையைப் பற்றிக்கொண்டிருக்கும் ఢ) &డు tL எடுத்துவிடுக. இங்ங்னம் கவிழ்க்கப்பெற்ற கண்ணுடிப் பாத்திரத்தை ஒரு மழமழப்பான மேசையின்மீது வைத்துக் கவனமாக அந்த அட்டைத் துண்டினை மேசையின்மீதே நழுவச் செய்து விடுக. மேசையின்மீது கண்ணுடிப் பாத் திரத்தை மெதுவாக நகர்த்துக. மேசையின்மீது நீர் சிந்தாமல் கண்ணுடிப் பாத்திரத்தை வெறு மையாக்கும் ஒரு வழியை நீங்கள் சொல்லக் கூடுமா? இந்தச் சோதனை காற்றினைப்பற்றி எதனைக் காட்டுகின்றது? 91