பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. காற்று அமுக்கத்தைத் தருகின்றது என்பதைக் காட்டுதல் 2. ஓர் உயரமான கண்ணுடிச் சாடியைத் தேர்ந்தெடுத்து அதன் விளிம்பின்மீது ஒரு சில களிமண் கட்டிகளை வைத்திடுக. சாடியை நீரினுல் நிரப்புக. களிமண்ணின்மீது ஒரு சாறுனும் தட்டினை வைத்து, அதன் பின்னர் உயரமான சாடியையும் சாறுணும் தட்டினையும் கவிழ்த்திடுக. இந்த ஏற்பாடு கோழிக்குஞ்சுகட்கு நீர் பருகும் ஊற்ருகப் பயன் படுத்தப் பெறலாம். சாடியில் ஏன் நீர் தங்குகின்றது? களிமண் கட்டிகள் சாறுனும் தட்டினின்றும் ஒரு சிறிது நீரினை அகற்றுக. என்ன நேரிடுகின்றது? ஏன்? 3. 5 செ. மீ. அகலமும் 60 செ. மீ. நீளமு முள்ள ஒரு மெல்லிய பலகையைக் கைவசப் படுத்துக. கிட்டத்தட்ட 25 செ. மீ. விளிம்பின் மீது ஒட்டிக்கொண்டிருக்குமாறு அந்தப் பல கையை ஒரு மேசையின்மீது வைத்திடுக. ஒரு செய்தித் தாளினை எடுத்து மேசையின் மீதுள்ள பகுதி முற்றிலும் மூடப்பெறும் வண்ணம் அதனை விரித்திடுக. அடுத்து, தாளின் மையத்திலிருந்து வி ளி ம் பு க ளே நோக்கிக் கைகளிளுல் தட்டித் தாளின்கீழுள்ள எல்லாக் காற்றினையும் அமுக்குக. தாளின் கீழுள்ள காற்றினை எவ்வளவு நன்ருக நீங்கள் அகற்றுகின்றீர்கள் என்பதைப் பொறுத்து இந்தச் சோதனையின் வெற்றி அமைகின்றது. இது செய்யப்பெற்றதும் யாரையாவது ஒருவரைக்கொண்டு நீட்டிக்கொண்டுள்ள முனை யருகில் ஒரு கோலினைக்கொண்டு பலமாக அடிக்குமாறு செய்திடுக. என்ன நேரிடு கின்றது? இது காற்றினைப்பற்றி எதனேக் காட்டுகின்றது ? い 4 ஒரு நேரான கண்ணுடிக் குழல் அல்லது சோடா பருக உதவும் வைக்கோல் புற்குழலின் நுனியில் ஒரு விரலை வைத்துக்கொண்டு அதனை வண்ணநீரினைக் கொண்டுள்ள ஒரு சாடியினுள் இறக்குக. விரலினை அகற்றி என்ன நேரிடுகின்றது என்பதை உற்றுநோக்குக. குழலின் உச்சியில் மீண்டும் விரலை வைத்துக் கொண்டு சாடியினின்றும் குழலினை உயர்த்துக. என்ன நேரிடுகின்றது? ஏன்? காற்றினைப் பற்றி இஃது என்ன காட்டுகின்றது? 5. ஒரு தகரக் குவளையின் அடிமட்டத்தின் அருகில் ஓர் ஆணியைக் கொண்டு ஒரு துளை யினே இடுக. குவளையை நீரினுல் நிரப்புக. குவளை யின் உச்சியின்மீது உள்ளங்கையை இறுக்கமாக வைத்துப் பிடித்துக் கொள்க; துளையின் வழியாக நீர் ஓடுவது நின்றுவிடும். கையை அகற்றில்ை நீர் துளேயினின்றும் ஓடுகின்றது. இஃது எதனைக் காட்டுகின்றது? 6. ஓர் உயரமான கண்ணுடிச் சாடி அல்லது புட்டியைத் தேர்ந்தெடுத்திடுக. சிறிதளவு காகி தத்தை மரையாணி போல் சுருட்டி, அதனைத் தீப்பற்றச்செய்து அக் கொள்கலத்தினுள் வீழ்த் துக. விரைவாகக் கொள்கலத்தின்மீது ஒர் இரப் 92