பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX. பர்ப் பலூனை இழுத்துக் கிடத்துக ; அல்லது அதன் உச்சியில் ஒர் இரப்பர்த் துண்டினை வைத்து மூடுக. நீங்கள் என்ன காண்கின்றீர் கள்? இஃது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் விளக்கக்கூடுமா? 7. ஒரு முட்டையைப் பத் து நிமிடங்கட்கு அல்லது அ. து மி க க் கெட்டியாகும்வரையில் கொதிக்கவைத்திடுக. அதன் ஒட்டினை அகற்றுக. முட்டையை அப்படியே அதன் கெட்டியான வெள்ளைப் பகுதி உடையாமல் திணிக்கக் கூடிய தற்கேற்ற கழுத்தினையுடைய ஒரு புட்டியினைத் தேர்ந்தெடுத்திடுக. ஒரு குவார்ட் அல்லது லிட்டர் அளவுள்ள பால் புட்டி இதற்கு நன்ருக அமையும். ஒரு துண்டுக் காகிதத்தை மரையாணி போல் சுருட்டி, தீயில் கொளுத்திப் புட்டியினுள் வீழ்த்துக. கீழ்நோக்கியிருக்குமாறு அதனைப் புட்டியின் வாயில் விரைவாக வைத்திடுக. என்ன நேரிடு கின்றது? இதனை நீங்கள் எங்ஙனம் விளக்கு வீர்கள்? முட்டையை வெளியில் எடுப்பதற்காகப் புட்டியைத் தலைகீழாகத் திருப்புக. முட்டையின் கூரான பகுதி கீழ் நோக்கிய நிலையில் அது புட்டியின் வாயில் தங்கியிருக்கட்டும். இப் பொழுது புட்டியினுள் வேகமாக ஊதி விளைவு களே உற்றுநோக்குக. 8. நீருள்ள ஒரு பெரிய கொள்கலனில் பருக உதவும் ஒரு கண்ணுடிப் பாத்திரத்தை அமிழ்த் து.க. அக்கண்ணுடிப் பாத்திரம் நீரினல் நிரம்பி யிருக்கட்டும். அக்கண்ணுடிப் பாத்திரம் கிட்டத் தட்ட நீருக்கு வெளியிலிருக்கும்வரையிலும் அதன் வாய்ப்பகுதி கீழ்நோக்கியிருக்குமாறு வைத்துக்கொண்டு அதனை மேல்நோக்கி உயர்த்துக. ஏன் கண் ணு டி ப் பாத்திரத் தினின்றும் நீர் வெளியேறவில்லை? காற்று அமுக்கத்தைத் தருகின்றது என்பதைக் காட்டுதல் 9. ஒரு நீ ர் க் கு ழ வி ல் பொருந்தக்கூடிய அமுக்குகிண்ணத்தை (Force cup) நீரிஞல் நனைத்து முக்காலியின் உச்சிபோன்ற சமதள மாகவுள்ள இடத்தின்மீது அழுத்துக. அடைப் பானைக்கொண்டு முக்காலியை உயர்த்த முய லுக. ஏன் இஃது இயலுகின்றது ? 10. நீ ர் க் கு ழ லி ல் பொருந்தக்கூடிய இரண்டு அமுக்குகிண்ணங்களின் விளிம்புகளை நனைத்திடுக. இரண்டு இரப்பர்க் கிண்ணங் ി~. "భా : , ఉ : وسوسه முட்டையின் கூர்மையான பகுதி களையும் சேர்த்து அமுக்கி அதன்பிறகு இரண் டையும் பிரிக்க முயலுக. இரண்டையும் தனித் தனியாக இழுப்பதில் ஏன் அவ்வளவு தொல்லை உண்டாகின்றது ? இச் சோதனை பண்டைய மேக்டிபர்க் அரைக் கோளங்களின் (Magdeburg Hemispheres) சோதனையைப் போன்றது. 11. உங்க ள் வாயில் வைத்துக்கொண் டிருக்கும் பலூனில் சிறிதளவு காற்றினே ஊதுக. அந்தப் பலூனை ஒரு மேசையின் உச்சியருகில் கொணர்ந்து இரண்டு தேநீர்க் கிண்ணத்தினுல் அதன் பக்கங்களை அ ழு த் து க. மேலும் சிறிது காற்றினைப் பலூனுக்குள் ஊதி, அதன்பிறகு பலூனின் வாயினை நசுக்கியவண்ணம் மூடி விடுக. இச்சோதனை க வ ன ம க ச் செய்யப் பெற்ருல் நீங்கள் பலுரனுடன் இரண்டு கிண் ணங்களையும் தூக்கலாம். பலூனுடன் கிண்ணங் களை எது பிடித்துக் கொள்ளுகின்றது? 12. நீர் பருக உதவும் இரண்டு தடித்த கண் ணுடிப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவற் றுள் ஒன்றில் ஈரமான மையொற்றுத் தாளின் பட்டையைப் பொருத்துக. ஒரு துண்டுக் காகிதத்தை மரையாணிபோல் சுருட்டி, தீயில் பற்றச் செய்து மேசையின்மீதுள்ள ஒரு பாத் திரத்தினுள் வீழ்த்துக. கவிழ்க்கப்பெற்றுள்ள மற்ருெரு பாத்திரத்தை விரைவாக மையொற் றுத் தாளுடன் இறுக்கமாக அழுத்துக. மேலுள்ள கண்ணுடிப் பாத்திரத்தை தூக்கிக் கீழுள்ள பாத்திரத்தையும் எடுக்க முடியுமா? ஏன்? 93