பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. காற்றின் அமுக்கத்தை அளத்தல் 13. நீர் பருக உதவும் இரண்டு தடித்த கண் ணுடிப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திடுக. ஒவ் வொன்றையும் நீரால் நிரப்புக. ஒன்றன்மீது ஒரு துண்டுக் காகிதத்தை வைத்து, அதனை இரண்டின் விளிம்புகளும் நெருங்கி இணையு மாறு மற்ருென்றன்மீது கவிழ்த்திடுக. காகிதத்தினை அகற்றுக. என்ன நேரிடு கின்றது? ஏன்? 14. மரையுடன் கூ டி ய மூடியைக்கொண்ட ஒரு தகரக் குவளையில் கிட்டத்தட்ட 3 செ. மீ. அளவுள்ள நீரினை ஊற்றுக. குவளை திறந்தநிலை யில் அதனை ஓர் அடுப்பின்மீது (Stowe) வைத்து நீர் கொதித்து நீராவி திறந்த பகுதியின் வழியாக வெளிவரும் வரையில் அதனைச் சூடாக்குக. குவ ளையை விரைவாக நெருப்பினின்றும் அகற்றி மூடியைப்போட்டு இறுக்கமாகத் திருகி விடுக. குவளையை அப்படியே விட்டுவைத்து முடிவுகளை உற்றுநோக்குக. குவளையின்மீது குளிர்ந்த நீரின ஓடச் செய்தோ அல்லது அதனைக் குளிர்ந்த நீருள்ள தொட்டியில் மூழ்கும்படி செய்தோ இந்த விளைவினை விரைவுபடுத்தலாம். குவளை துளையிடப்பெருதவரையில், அதனை இலேசாகச் சூடாக்கி அது திரும்பவும் பயன் படத்தக்கவாறு பருமளுக்கிக் கொள்ளலாம். வீடுகளில் மாசுபோக்கிகளின் (Detergents) கொள்கலன்களாகப் பயன்படும் பிளாஸ்டிக் புட்டிகள் அல்லது பீப்பாய்கள் இத்தகைய ஒரு சே த னை க் கு ப் பயன்படுத்தப்பெறலாம். முடியை அகற்றிப் புட்டியைக் கழுத்துவரையில் ஒரு சில நிமிட நேரம் வெந்நீரில் வைத்திடுக. திரும்பவும் மூடியைப் போட்டுப் புட்டியைக் குளிர்ந்த நீரில் அமிழ்த்துக. என்ன நேரிடு கின்றது என்பதை விளக்குக. 15. தீய்ந்துபோன மின் விளக்குக் குமிழினை ஒரு வாயு அல்லது சாராய விளக்கில் இலே சாகச் சூடுபடுத்தி அதனினின்றும் பித்தளைக் கூட்டினை அகற்றுக. முத்திரை அரக்கு புகை விடத் தொடங்கியதும், சாமணத்தைக் கொண்டு கூட்டினை இருகப் பற்றிக்கொண்டு கண்ணுடிக் குமிழினின்றும் அதனை முறுக்கி இழுத்துவிடுக. குமிழினின்றும் நீட்டிக்கொண்டிருக்கும் மூடப் பெற்றிருந்த குழலின் நுனியை உற்றுநோக் குக: இக் குழல்மூலந்தான் காற்று அகற்றப் பெற்றது. வண்ண நீருள்ள ஒரு சாடியில் குமிழின் குழல் முனை கீழிருக்குமாறு அதனை வைத்திடுக. குழல் நீரில் இருக்கும்பொழுது குழலின் நுனியை ஒரு சாமணத்தால் நறுக்கி விடுக. என்ன நேரிடுகின்றது? நீங்கள் இதனை எங்ங்ணம் விளக்குவீர்கள்? E. காற்றின் அமுக்கத்தை அளத்தல் 1. எளிய பாதரசக் காற்று அழுத்தமானி : கிட்டத்தட்ட 80 செ. மீ. நீளமுள்ள ஒரு குழலின் துனியை ஒரு வாயுச் சுவாலையில் சுழலும்படி செய்து அடைத்துவிடுக. எவ்வளவு இயலுமோ அவ்வளவு அக் குழல் செங்குத் தாகப் பிடித்துக் கொள்ளப்பெறுதல் வேண்டும். திறந்துள்ள வாயு அழுத்தமானிக் குழலுடன் ஒரு சிறிய புனல் அல்லது வேருெரு குழலை (Thistle tube ) ஒரு சிறு இரப்பர்க் குழலால் இணைத்திடுக. பாதரசத்தை மெதுவாக க் குழலினுள் ஊற்றுக. காற்றுக் குமிழிகள் சிக்கிக் 94 கொண்டால் குழலிலுள்ள பாதரசத்தை மேலும்.கீழுமாகக் குலுக்கி அ ைவ நீக்கப் பெறலாம். உச்சியில் 1 செ. மீ.க்குள் இருக் குமாறு குழலினை நிரப்புக. பாதரசம் சேதப் படாமலிருக்கும்பொருட்டு இறுதிப் பகுதி ஒரு மருந்து சொட்டும் குழலினைக்கொண்டு நிரப் பப்பெறுகின்றது. குழல் மட்டத்திற்குமேல் ஒரு சிறிது பாதரசம் நீட்டிக்கொண்டிருக்குமாறு அதனை நிரப்புக. ஒரு புட்டியினுள் அல்லது தட்டில் கிட்டத்தட்ட 2 செ. மீ. அளவுள்ள பாதரசத்தை ஊற்றுக. உங்களுடைய விரலைக் குழல் முனையின்மீது வைத்துக்கொண்டு அதன்