பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலின் நோக்கம் ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் மாளுக்கர்களை ஒரு குறிப்பிட்ட பகுதி யிலுள்ள் பள்ளிகளுக்காகக் கருவியுறைகளை அமைக்கும் செயல் திட்டங்களை மேற்கொள்ளச் செய்து அவற்றை நிறைவேற்றுவிப்பது மற்ருெரு முறையாகும். அறிவியல் கழகச் செயல்களில் மூலமுதல் நூலாக : அறிவியல் கழக உறுப்பினர்களுக்குப் பயனுடைய செயல் திட்டங்களையும் செயல்களையும் தருவது அக்கழகத்தைத் தொடங்கி நடத்துவோருக்கு ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள பல செயல் திட்டங்களும் சோதனை களும் எல்லா வ்யது நிலைகளிலுமுள்ள இளைஞர்கட்கு அறிவியல் கழகச் செயல் திட்டங்களாக அமைவதற்கு மிகவும் பொருத்தமாகவுள்ளன. - - - பல நாடுகளுக்கும் அறிவியல் பொருள்கள், செயல்கள் இவற்றிற்கு ஒரு மாதிரிக் கோலமாக அமைவதில்: - எந்த உள்ளூர் நிலைமைக்கும் ஏற்பப் பயன்படுத்திக்கொள்வதற்கேற்றவாறு இப்புத்த கத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள பொருள்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ளன. இப்புத்தகத்தின் அமைப்பும் வடிவமும் அதற்கேற்றவாறு திட்டமிடப்பெற்றுள்ளன. நூற்பொருள்களையும் எளிய கோட்டு ஓவியங்களையும் எளிதாக எவரும் திருப்பி அப்படியே தரலாம். - - எளிய தளவாடத்தை அமைப்பதற்குத் தேவையான கைக்கருவிகள் - தொடக்க அறிவியல் அல்லது பொது அறிவியல் பயிற்றப்பெறும் ஒவ்வொரு பள்ளியிலும் எளிய தளவாடத்தை அமைப்பதற்குத் தேவையான தொழில்பயில் பலகை (Work-beich) யொன்று இருத்தல் மிகவும் இன்றியமையாதது. ஒரு பழைய மேசை இதற்குப் போதுமானது. இத்தகைய தொழில்பயில் பல்கை அமைப்பதற்குரிய இடம் இல்லையாயின், ஒரு சில சொரசொரப் பான பலகைகளைத் தக்க அளவு நீளத்தில் வெட்டிப் பள்ளிச் சாய்வு மேசையின்மீது அமைத்துக் கொள்ளலாம்; இதல்ை மேசையின் மேற்புறம் வெட்டுப் படாமல் காக்கப்பெறும். அத்தகைய பலகைகளின் அடியில் துணியை அமைத்து மெத்தெனச் செய்து கொள்ளலாம். தொழில் பயில் பலகையில் சுத்திக்கும் வாளுக்கும் (இரம்பம்) ஒர் இடம் இருக்கும். வண்ண வேல்ையை மேற்கொள்ள நேரிடும்பொழுது பழைய செய்தித் தாள்களைத் தரையில் பரப்பித் தரையை மாசு படியாவண்ணம் காக்கலாம். அடியிற் குறிப்பிடப் பெற்றுள்ளவை எளிய தளவாடத்தை அமைப்பதற்குத் தேவையான அடிப்படைக் கைக் கருவிகளின் பட்டியலாகும் : சுத்திகள் தகடு வெட்டும் கத்தரிக்கோல் துணிவெட்டும் கத்தரிக் திருப்புளிகள் உருட்டு அரம் கோல் குறடுகள் முப்பட்டை அரம் சிறிய பிடிசாவி சிறிய மரவாள் தட்டை அரம் பளுவான இரும்புத் துண்டு உலோக வாள் ஜாக்-கத்தி (பட்டறை) சிறிய இழைப்புளி மீட்டர் கோல் உப்புத்தாள் மர உளி கண்ணுடி வெட்டி நறுக்குக் கத்தி நெருக்க உதவும் கருவி முகடுசிவும் இரம்பம் உருக்குக் கம்பி , துளையிடுங் கருவி தகரக் கலம் திறக்கும் கருவி தோல் துளையிடு கருவி (உலோகங்களே ஒட்டவைக்கும்) பற்ருக திருகுக் குறடுகள் பொருள்களும் தருவித்த பொருள்களும் எளிய தளவாடம் அமைத்தற்குரிய பொருள்கள் இடத்திற் கேற்றவாறும் வகுப்பிற்கேற்ற வாறும் மாறும். எனினும், சில அடிப்படைப் பொருள்களைக் குறிப்பிடுவதும் அவை எங்கிருந்து பெறலாம் என்பதைக் குறிப்பிடுவதும் இயலக் கூடியவையே. . xii