பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலின் நோக்கம் இரவலாக வழங்கப்பெறும் எளிய அறிவியல் பயிற்றும் பெட்டிகளே அமைப்பதில் அடிப்படையாக பல்வேறு அறிவியல் பாடப் பகுதிகளைப் பயிற்றுவதற்குத் தேவையான எளிய தளவா டத்தை அமைப்பது ஒவ்வொரு பள்ளியின் குறிக்கோள் நிலையாக இருந்தாலும், நிதிக் குறைவின் கர்ரண்மாகவோ அல்லது நேரம் போதாக் காரணமாகவோ இஃது எப்பொழுதும் செய்யக் கூடியதாக இருப்பதில்லை. சோதனைகள் செய்வதற்காக எளிய தள வாடம் கொண்ட கருவியுறை களை (Kits) ஒன்று சேர்ப்பது அடுத்த திட்டமாகும். ஒவ்வொரு கருவியுறையும் இறுக்கமாகப் பூட்டிக் கொள்ளும் கீலுடன் கூடிய மூடியைக்கொண்டதும் நீடித்து உழைக்கக்கூடியதுமான பெட்டியில் ஒன்று சேர்க்கப்பெறுகின்றது. அதன் பிறகு இந்தக் கருவியுறைகள் ஒரு மையமான பள்ளியில் சேகரஞ் செய்யப்பெற்று அருகிலுள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களுக்கு நூல கத்தின் நூல்களே இரவலாக வழங்கும் முறையைப் போலவே ஒருமுறையில் இரவலாக வழங்கப் பெறுகின்றன. ஒவ்வொரு கருவியுறையும் அப்பெட்டியிலுள்ள பொருள்களின் பட்டியலையும் சோதனைகளைச் செய்வதற்கான வழிகாட்டும் குறிப்புக்களையும் கொண்டுள்ளது. இத்திட்டம் இவ்வாறு செயற்படுகின்றது: மையமாகவுள்ள பள்ளியொன்றில் கருவியுறைகள் அமைக்கப்பெற்றுச் சேகரம் செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் அந்தக் கருவியுறைகளை ஒழுங்கான முறையில் வைத்துக் கொள்வதிலும் அதற்குத் தேவையான பதிவேடுகளே அமைத்துக் கொள்வதிலும் பொறுப்பேற்றுக் கொள்வர். ஒவ்வொரு கருவியுறைக்கும் அட்டையொன்று தயாரிக்கப்பெறுதல் வேண்டும். x என்ற பள்ளியிலுள்ள் ஒர் ஆசிரியர் அடுத்த வாரத்தில் காந்தம் பற்றிய பகுதியில் ஒர் அலகினைக் (Unit) கற்பிக்க ப் போவதாகக் கருதுவோம். அவர் இந்தக் கருவியுறைகள் வைக்கப்பெற்றுள்ள பள்ளிக்குச் சென்று அங்கு இதற்கெனவுள்ள அட்டையொன்றில் தனக்கு காந்தம்பற்றிய கருவியுறை எப்பொழுது தேவை என்பதையும், தான் அதனை எந்த நாளில் திருப்பித்தரக் கூடும் என்பதையும் விவரமாக நிரப்பித் தருவார். கருவியுறைகட்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரியர் அந்த அட்டையினை வாங்கி. கருவியுறை அட்டையில் அந்த ஆசிரியரின் பெயர், அவர் பணியாற்றும் பள்ளி முதலியவற்றை தேதிகளுடன் குறித்துக் கொள்வார். அதன் பிறகு அக்குறிப்பிட்ட கருவியுறை அவ்வாசிரியரிடம் தரப்பெறுகின்றது; அவர் அதனைத் தன் வகுப்பறைப் பயனுக்காக எடுத்துக்கொண்டு செல்லு கின்றர். குறிப்பிட்ட பாடத்தின் இறுதியில் கருவியுறையிலுள்ள பொருள்களைப் பட்டியலுடன் வைத்துச் சரிபார்க்கப்பெறுகின்றது; ஏதாவது பொருளொன்று உடைபட்டிருந்தால் அஃது அட்டையில் குறிக்கப்பெறுகின்றது. அதன் பிறகு அந்தக் கருவியுறை சேமிக்குமிடத்தில் சேர்க்கப்பெறுகின்றது. -- இத்தகைய எளிய தளவாடக் கருவியுறைகளே நூலகம்போல் ஒன்று சேர்க்கும் செயல் திட்டத்தை (Project) பல முறைகளில் மேற்கொள்ள ப்பெறலாம். தொழிற் பள்ளிகளில் பயிலும் மாளுக்கர்களைக் கொண்டு மேற்குறிப்பிட்ட கோலத்தில் (Pattern) பெட்டிகளைச் செய்விப்பது ஒரு முறையாகும். கருவியுறைகள் ஒரு மையமான இடத்தில் ஒன்று சேர்க்கப்பெறலாம்; அல்லது ஒவ்வொரு ஆசிரியரும் தன் வகுப்புடன் சேர்ந்து கூட்டுறவு முறையில் ஒன்றுசேர்ப்பதிலும் ஒரு பயிற்றும் கருவியுறைக்குத் தேவையான பொருள்களை ஆக்குவதிலும் உள்ள பொறுப்பின்ை மேற்கொள்ளலாம். xi