பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலின் நோக்கம் அதனைக் கட்டுமானம் செய்வதும் அடங்கிய கல்வியைப் பெறுவதற்கேற்ற செய்முறை அல்லது ஆய்வக முறையில் அறிவியல் பயிற்று முறைகள்பற்றிய பயிற்சியின் பெரும் பகுதியைக் கொண்டுசெலுத்தவேண்டும். இத்தகைய பயிற்சியினுல் மட்டிலுமே அவர்கள் தங்கள் பயிற்றலை உற்றுநோக்கலிலும் சோதனையிலும் அமைத்துக் கொள்ளுமாறு தூண்டப்பெறுவர். இந்தச் செய்முறைப் பயிற்சியில் இளம் ஆசிரியர் தாம் கற்பிக்கவேண்டிய முதல் ஒப்படைப்பினே (Assigment) நிறைவேற்றுவதற்குத் தேவையான தளவாடத்தின் பல பகுதி க்ளேக் கட்டுமானம் செய்யும் வாய்ப்பினைக் காணல்வேண்டும். மேலும், அவர் பயிற்றும் கருவி யுறைகளின் உட்கருவினை (Nucleus) ஒன்றுபடுத்தத் தொடங்குவதிலும் ஊக்கம் தரப்பெறுதல் வேண்டும். - - - அறிவியல் ஆசிரியர்களின் மூலமுதல் நூல் : அறிவியல் பயில்வதற்கு வாய்ப்பில்லாத பல ஆசிரியர்கள் அதனைக் கற்பிப்பதற்கு அஞ்சுகின்றனர். பெரும்பாலோரிடம் இவ்வாறு அச்சம் எழுவதற்குக் காரணம், அவர்கள் துணைக் கருவியை எவ்வாறு ஒன்று சேர்ப்பது என்பதைப்பற்றி அறிந்து கொள்ளாததும், அல்லது தேவையான தனித்துன்றபற்றிய கற்றல் அதுபவங்களைத் திரட்டத் தெரியாம. லிருப்பதுவுமே யாகும். அத்தகைய ஆசிரியர்கள் இந்த நூலினத் தேவையான எளிய தளவா, டத்தை அமைப்பதற்கு ஒரு மூலக் கல்வி ஏடாகவும், கல்வித் திட்டத்திலுள்ள எந்த ஒரு தலைப் பினையும் பயிற்றுவதற்கேற்ற பல்வேறு வகைக் கற்றல் அநுபவங்களின் மூலமுதலாகவும் பயன் படுத்தலாம். இம்முறையில் பயிற்றலை மேம்பாடடையச் செய்யலாம்; வளமுடையதாகவும் ஆக்கலாம். - மேலும், இந்நூல் மாளுக்கரிடையேயும் அறிவியலில் உயர்ந்த நிலையில் கவர்ச்சியை எழுப்புவதற்கும், அதனை நிலைபெறச் செய்வதற்கும் துணைபுரிதல் வேண்டும். இயல்பாகவே ஒவ்வொரு சிறுவனும் சோதனையாளனுகவே உள்ளான். ஏன் செயல்கள் நேரிடுகின்றன என்பதை அறிவதில் அவன் விடுப்புடன் (Curious) உள்ளான்; தன்னுடைய கருத்துக்களைச் சோதிக்கவும் விரும்புகின்றன். பள்ளிக்கு வெளியிலும் சிறுவர்கள் எப்பொழுதும் சேர்த்ன் செய்து கொண்டே உள்ளனர். பல இளைஞர்கள் தாம் வகுப்பறையில் கண்ட அநுபவங்களைச் சோதிக் கவும் அதற்கேற்ற துணைக்கருவியை அமைத்துக்கொள்ளும் வகையில் உதவி பெறுதலையும் விரும்புவர். - இங்குக் குறிப்பிடப்பெற்ற பல துணைக்கருவிகளை அமைப்பதிலும் அவற்றைப் பின்னர் செய்யவேண்டிய சோதனைகளில் பயன்படுத்துவதற்கேற்றவாறு பயன்படும் கருவியுறைகளில் ஒன்றுகச் சேர்ப்பதிலும் மாளுக்கர் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளியில் ஒரு தொழிலகம் இருந்தால், அங்கு அறிவியல் தளவாடத்தை தனித்துறைச் செயல் திட்டங்களிாக (Projects) அமைத்தலில் மாளுக்கர்களை அனுமதிப்பதில் அந்த ஆசிரியர் ஒத்துழைப்பினை நல்கலாம். அறிவியல் பயிற்றலின் தொழிலக ஆராய்ச்சி முறை மாநாடுகட்கு அடிப்படையாக : தொழிலில் இருந்துகொண்டுள்ள ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதில் தொழிலக முறை ஆய்வு மாநாடுதான் எங்கும் பெருவழக்காகப் பயன்படுத்தப்பெற்று நடைமுறையிலிருந்து வருகின்றது. இத்தகைய மாநாடுகள் அறிவியல் ஆசிரியர்கட்காக உலகின் ப்ல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இவற்றின்மூலந்தான் இன்று ஆசிரியத் தொழிலில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பழக்கங்களில் ம்ேம்பாடு கான்ச் செய்வதில் செல்வர்க்கினைக் கொண்டு செலுத்தலாம்; அவர்களுடைய தற்கால நிலைமைகளையும் மாற்றியமைக்க வழிகோலலாம்.

  • இந்தப் புதததழ அவர்கட்கு அறிவியல் பயிற்றும் முறைகள்பற்றிய கல்வி புகட்டுவதிலும், அாக-கு ஆயவகச் செய்முறையில் பயிற்சி அளிப்பதிலும் அடிப்படையாக இருந்து துணைபுரியக் கூடும்; இதல்ை அந்த ஆசிரியர்கள் அப்போதைய ஏற்பாடாகத் துணைக்கருவியை அமைத்துக் கொள்வதில் மேற்கொள்ளப்பெறும் எளிய துறை நுட்பங்களில் நன்கு பயிற்சி பெறுகின்ற்ன்ர். அதன் பிறகு அவர்கள் பணியாற்றும் பகுதியிலுள்ள ஏனைய ஆசிரியர்கட்கும் அவர்களைக் கொண்டு பயிற்சி தருவதில் அவர்கள் ஊக்குவிக்கப்பெறுகின்றனர்.