பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலின் நோக்கம் இன்று அறிவியல் பயிற்றலுக்குப் போதுமான வாய்ப்புத் திறன்களும் தளவாடமும் இல்லாத இடங்கள் உலகில் பல உள்ளன. அத்தகைய இடங்களை அறிவியல் செயற்படுதலில் மிக முன்னேற்றம் அடைந்த பகுதிகளிலும் வேறு பகுதிகளிலும் காணலாம். உற்றுநோக் கலையும் சோதனையையும் அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளிலும் பயிற்சிக் கல்லூரிகளிலும் அறிவியல் பயிற்றலின் தரத்தை உயர்த்தும் போக்கில் துணை செய்வதற்கென்றே இப்புத்தகம் ஆக்கப்பெற்றுள்ளது. இந்த நூலின் அடிப்படையான நோக்கங்களை அடியிற் கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்: 1. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் அறிவியல் பயிற்றும் முறைகளை ப்பற்றிய கல்வியை அளிப்பதற்கு அடித்தளம் அமைத்தல்; 2. தொடக்க நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்கட்குப் பயிலும் அநுபவங்களுக்கும் தேவையான பொருள்களுக்கும் பயன்படக்கூடிய மூல முதலை அளித்தல்; - 3. தொழிலிலிருந்துகொண்டே பயிற்சி பெறும் ஆசிரியர்கட்கு அறிவியல் பயிற்று முற்ைகளில் பெறும் தொழிலகப் பயிற்சி வழிகளிலும் பாடத் திட்டச் செல்திசை யிலும் (Course) கல்வி பெறுவதில் ஒரளவு அடிப்படையைத் தரக்கூடிய கையேட் டினைத் (Manual) தருதல்; 4. அறிவியலுக்கென எளிய தளவாடம் அடங்கிய இரவலாக வழங்கப்பெறும் பயிற்றும் கருவியுறைகளைத் (Teaching kits) தொகுப்பதற்குரிய அடிப்படையை நல்குதல்; அறிவியல் கழகங்களுக்கும் வேறு பொழுதுபோக்கான அறிவியல் செய்வினைகளுக்கும் சில குறிப்புப் பொருள்களை வழங்குதல்; பல நாடுகளிலும் அறிவியல் பயிற்றுதலில் நிலவும் நிலைமைகளுக்கேற்பவும் அந்நாட்டு தேசிய மொழியில் பெயர்த்துக் கொள்வதற்கேற்பவும் திட்டமிட்டு வளர்த்த ஒரு முன்மாதிரி அல்லது கோலத்தைக் காட்டுதல். இந்நூலின் பயன்கள் ஆசிரியப் பயிற்சி நிலையங்களில் : பயிற்சிபெறும் இளம் ஆசிரியர்கள் கல்லூரிகளில் சொற்பொழிவுகளைக் கேட்பதால் மட்டிலுமே திறமையாக அறிவியல் பயிற்றக் கூடிய முறைகளைக் கற்றுக் கொள்வதில்லை; தம்மு டைய பயிற்சிக் காலத்தில் தாம் பின்னர் வகுப்பறையில் காணக்கூடிய பல புதிர்களைப் பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ளல் வேண்டும். பொது முறைகள்பற்றிய பயிற்சியில் தரம் பெறுவதற்கு மேலும் அதற்கப்பாலும் அறிவியல் பயிற்றலைப்பற்றித் தனிக் கவனம் செலுத் தப்பெறுதல் வேண்டும். இதற்குக் காரணம் யாதெனில், பள்ளிக் கல்வித் திட்டத்தில் அறிவியல் தனித்தன்மை வாய்ந்த ஒரு பாடமாக உள்ளது; அதனேக் கற்பிப்பதற்குத் தனித் துறைப் பொருள்களையும் தள் வாடத்தையும் பயன்படுத்துவதுடன் அதனே அணுகுவதற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த முறைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும், அறிவியல் கல்வியின் தரம் உயர்த்தப்பெறவேண்டுமாயின், ஒவ்வொரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் கல்வித் திட்டத்திலும் பயிற்றலின் துறை நுணுக்கங்கள் அடங்கிய அத்தகைய தனிச் சிறப்புடைய பாடத் திட்டச் செல்திசை அமைதல் வேண்டும். இளம் ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கும் சமூகத்தில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டே எளிய ஆய்வக தளவாடத்தைக் கண்டறிவதும், அதனைத் திட்டம் செய்வதும் ix