பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்புபற்றிய குறிப்பு இந்தத் திருந்திய விரிவுப் பதிப்பில் உலகின் எல்லாப் பகுதிகளினின்றும் வந்த குறிப்புக் களைப்பற்றிய கவனம் எடுத்துக்கொள்ளப்பெற்றுள்ளது. இவற்றை அடிப்படையாகக்கொண்டு 'மின்சாரமும் வேதியியலும்', ஒளியியல்பற்றிய புறத்தெறிதல்' என்ற தலைப்புக்களிலுள்ள புதிய பகுதிகளையும், ஈர்ப்பு ஆற்றில் பற்றிய விரிவுப் பகுதியையும் சேர்த்து ஐம்பது புதிய சோதனைகள் இப்புத்தகத்தில் சேர்க்கப்பெற்றுள்ளன. அறிவியல் பயிற்றலில் அண்மைக் காலப் போக்குகள் பற்றிய ஓர் இயல் இப்புத்தகத்தில் சேர்க்கப்பெற்றுள்ளது; இதில் பெளதிகம் பற்றிய அழுத்தத்தைக் காணலாம்; பின்னிணைப்புக் களும் மாற்றியமைக்கப்பெற்றுள்ளன. வெளியிடுவோரின் பட்டியலுக்குப் பதிலாக அறிவியல் ஆசிரியர்களின் நூலகத்திற்குப் பயன்படக்கூடிய நூல்களின் பட்டியல் தரப்பெற்றுள்ளது. பருவ இதழ்களின் பட்டியலும் புதியதாக அமைக்கப்பெற்றுள்ளது. அடியிற்கண்ட அன்பர்கள் பெருந்தன்மையுடன் நல்கின உதவிக்கு நமது நன்றி உரியது. நூல்களின் பட்டியல்பற்றிய குறிப்புக்களை நல்கியவர்கள் : திரு. எம். ஏ. டால்மேஜன் (ஃபிரான்சு); டாக்டர் ஆர். எட்டி, டாக்டர் ஜஃப்ரீமென், டாக்டர். ஈ. எஸ். ஆஸ்பர்ன் ஆகியோரும் தேசிய அறிவியல் ஆசிரியர்க் கழகமும் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்); திரு. விைலின் (சோவியத் இரஷ்யா). வேறு பல பயன்படும் குறிப்புக்களையும் பரிசோதன்ைக்ள்ேயும் நல்கியவர்கள்: திரு. பெர்நாலெர் (ஸ்பெயின்), திரு. என். டிக்வெல் (ஹாலந்து), திரு. ஜே. எம். கிராஸ் (ஹாண்டுராஸ்), திரு. ஃபிக்வெட் (பாண்டங்க்), திருமதி ஹிஜ்ஜிஸ் (காளு), திரு. ரிலன் (நார்வுே) ஆகியோரும் பிராணிகளின் பாதுகாப்பிற்காகவுள்ள உலக இணைப்பரசும். வாஷிங்க்டன் டி.ஸி. யிலுள்ள கல்விதுறையினரும் (Educational Services Inc.), சார்லஸ் உடல்நலக் கம்பெனியாரும் கூட பெளதிக அறிவியல்கள் ஆராய்ச்சிக் குழுவின் பாடப்பிரிவினின்றும் திறமை மிகுந்த சோதனைகளில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள்த் தம்முடைய இசைவினை அளித்துள்ளனர். viii