பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை அறிவியல் அனைத்தையும் உட்கொண்ட ஒரு துறையாகும்; அதற்கு எல்லேக் கோடுகளே இல்லை. இன்று மனிதன் சேமித்து வைத்துள்ள அறிவுக் களஞ்சியம் முழுவதும் பல நாட்டைச் சேர்ந்த தொண்டர்களால் விருப்பமில்லாத இயற்கையன்னையிடமிருந்து பொறுக்கித் திரட்டப் பெற்றதாகும். இந்நிலையில் பல நாட்டைச் சார்ந்த பட்டறிவுமிக்க அறிவியல் ஆசிரியர்களால் தொகுக்கப்பெற்று யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல் வெளி வருவது மிகவும் பொருத்தமாகும். இங்ங்னம் பட்டறிவினைப் பகிர்ந்து கொள்வதன்மூலம் அறிவியல் பயிற்றலை மேம்பாடடையச் செய்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்த භී) (), இந்த நூல் வெளிவருவதற்குக் காரணமாக இருந்த அனைவரையும் எடுத்துக்காட்டுவது முற்றிலும் இயலாததொன்று. இந்நூலின் சேர்க்கப்பெற்ற பொருளில் பெரும் பகுதி கடந்த காலத்தில் நீளப் பயின்று வந்ததாகும்; அஃது எல்லா இடங்களிலுமுள்ள அறிவியல் ஆசிரியர் கள் பொது மரபுரிமையாகப் பெற்றுவந்த கருவூலத்தின் ஒரு பகுதியாகும். இந்த நூல் வெளி வருவதற்கு நேரடியாகக் காரணமாக இருந்தவர்களுள் முதன்முதலாகக் குறிப்பிடவ்ேண்டியவர் இலண்டன் மாநகர்ப் பள்ளியைச் சார்ந்த ஜே. பி. ஸ்டீஃபென்ஸன் என்பார் ஆவார். தொடக் கித்தில் யுனெஸ்கோவின் வெளியீடான ஆழிபட்ட நாடுகளின் அறிவியல் ஆசிரியர்கட்குக் குறிப் புக்க்ள்” என்ற நூலினின்றும் பெரும் பகுதிப் பொருளை எடுத்துக்கொண்டம்ைக்கு ஜே. வி. ஸ்: ஃ பென்ஸனுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய அன்பர்கட்கும் நாம் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம். அறிவியல் பயிற்றலேப்பற்றிய இச் சிறிய நூலின் செல்வாக்கு உலக மெங்கும் பரவியுள்ளது; ஏற்கெனவே அஃது அறிவியல் கல்வி இலக்கியத்தின் உயர்நிலை இலக்கியமாக்ப் (Classic) கருதப்பெறுகின்றது. தொடக்க அறிவியல்_பயிற்றலைப்பற்றிய இரண்டு செய்தி அறிக்கைகளின் (Bulletins) பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இசைவு தந்த அவற்றின் இணை ஆசிரியர்களானி மாரி லாண்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டாக்டர் க்ளென் ப்ளோ என்பாருக்கும், வாஷிங்க் டன், டி.சி.யிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (United States) கல்வி அலுவலகத்தைச் சார்ந்த டாக்டர் பால் பிளாக்வுட் என்பாருக்கும் நமது நன்றியும் பாராட்டுதலும் உரியவை; ‘இன்றைய அறிவியல் பயிற்றல்’ என்ற தொடர் நூல்களினின் பொருளைப் பயன்படுத்திக் கொள் ளப் பொது இசைவு அளித்தமைக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அறிவியல்'ஆசிரியர்க் கழகத்தினருக்கும், குறிப்பாக அதன் செயலாளர் ராபர்ட் கார்லெட்டன் என்பாருக்கும் இவர்கள் மூலம் நியூயார்க் ஆசிரியர்க் கல்லூரியைச் சார்ந்த கை புருஸ் என்பாருக்கும் நம் நன்றி உரியது; நியூயார்க் மாநிலக் கல்வித் துறையின் வெளியீடாகிய “பொதுஅறிவியல் கையேடு (பகுதி 1) என்ற நூலின்_பொருளைப் பயன்படுத்திக் கொள்ள இசைவு தந்தமைக்கு அத்துறையின்ருக்கும் நம் நன்றி உரித்தாகுக. 1956-திசம்பரில் யுனெஸ்கோவின் அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்” வெளி வந்ததிலிருந்து பல உயர்ந்த குறிப்புக்களும் சோதனைகளும் வந்துள்ளன; உலகின் எல்லாப் பகுதிகளிலுள்ள பல புருவ இதழ்களில் (joயூals) பல மதிப்புரைகள் வெளியாகியுள்ளன. இவற்ருல் இந்நூல் ஒவ்வொருமுறை ஆச்சேறும்பொழுதும் சிற்சில திருத்தங்கள் இதில் மேற் கொள்ளப்பெற்றுள்ளன. முதல் ஆங்கிலப் பதிப்பு பதிளுெரு முறை திரும்பத்திரும் அச்சேதி யுள்ளது; ஃபிரெஞ்சுப் பதிப்பு நான்காவது தடவை அச்சேறுகின்றது. ஏழு ஏனைய மொழிகளில் இந்நூல் மொழி பெயர்க்கப்பெற்றுள்ளது; இன்னும் பதின்ைகு மொழிகளில் மொழிபெயர்ப் புக்கள் தயாராகிக் கொண்டுள்ளன. பயனுள்ள குறிப்புக்களையும் யோசனைகளையும் தந்தவர்களுள் இவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்: முன்ஞள் ஆஸ்திரேலிய அறிவியல் ஆசிரியர்க் கழகத் தலைவரும், ஆஸ்திரேலியாவி லுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகக் கல்வித் துறையைச் சார்ந்தவருமான டாக்டர் எஃப்.ஜே. ஆஸ்லன்;இலண்டன் பல்கலைக் கழகக் கல்வி ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்தவருமான டாக்ட்; ட்பிள்யூ. லாவர்ச் ஃபிலிப்பைன்ஸ் தீவுகளின் யுனெஸ்கோவின் முன்னுள் அறிவியல் பதிந்தல் துறைவல்லுநரான டாக்டர் விடா ரிஸ்பெர்க், vii