பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிகளையும் வானிலை நிலையத்தினையும் இயற்றுதல் فنية شهrه مA கொள்க. காற்றுத் திசைகாட்டி அமைத்த பொழுது நீங்கள் செய்ததைப் போலவே இந் தக் காற்று வேகங்காட்டிக்கும் ஓர் ஏற்றும் கழி யைத் தயாரித்திடுக. கழியின் முனையில் ஓர் ஆணியை அடித்து அரத்தினைக் கொண்டு அதனைக் கூர்மையாக்குக. உங்களுடைய காற்று வேகங்காட்டி காற்றில் சுழலும். 30 வினுடிகளில் உண்டான சுற்றுக் களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதனை 5ஆல் வகுத்து, காற்று மணிக்கு எத்தனை மைல் வீதம் வீசுகின்றது என்பதைப்பற்றிய உத் தேசக் கருத்தினைப் பெறலாம். இதனை நீங்கள் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் என்று அறிய விரும்பிளுல் அதனைத் திரும்பவும் 0.62 ஆல் வகுத்துப் பெறுக. ஒர் அமைதியான நாளில் யாராவது ஒரு வரைக்கொண்டு உங்களை ஒரு மோட்டார் காரில் ஒட்டிக்கொண்டு போகச் செய்து காற் றின் நேர் வேகத்தைத் தீர்மானிப்பது மற்ருெரு வழியாகும். உங்களுடைய வேகங்காட்டியை முன்பக்கச் சாளரத்தின் வெளிப்புறத்திலிருக்கு மாறு பிடித்துக்கொண்டு வண்டியோட்டியை மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் ஒரே நிலை யாகப் போகுமாறு செய்க. இந்த வேகத்திற்கு 30 விநாடிகளில் சு ற் று ம் சுற்றுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. வண்டியோட் டியை மணிக்கு 10,15,20,25,30,40......மைல் வேகத்தில் போகச் செய்து இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. உங்களுடைய காற்று வேகங் காட்டியை எல்லாத் திசைகளினின்றும் வரும் காற்றில் படக்கூடிய இடத்தில் ஏற்றி வைத்திடுக. 4. மழை அளவி : ஒரு புனல், ஒரு புட்டி, நீரின் பரிமாணத்தை அளப்பதற்குரிய ஒர் அளவு உருளை இவற்றைக் கொண்டு ஓர் எளிய மழை அளவியை (Rain gauge) இயற்றுவது எளிதாகும். புனல் மிகவும் கூரிய விளிம்பினையோ அல்லது கிடைமட்ட இதழினையோ கொண் டிருத்தல் வேண்டும்; இந்த அமைப்பு மழைத் துளிகள் வெளியே தெரித்து விழுதவி னின்றும் தடுக்கப்பெறும். புனல் மட்டிலும் தரைமட்டத்திற்குமேல் ஒரு சில சென்டி மீட்டர்கள் இருக்குமாறு ஆய்கருவி முழுவதும் பூமியில் புதைக்கப்பெறுதல் வேண்டும். 5. மற்றெரு மழை அளவி : கிட்டத்தட்ட 10 செ. மீ. குறுக்கு விட்டமும் 14 செ. மீ. உயரமும் உள்ள ஒரு பெரிய தகரக் குவளையைத் தருவித்திடுக. அடுத்தபடியாக சுமார் 3 செ. மீ. குறுக்குவிட்டமும் குறைந்தது 25 செ.மீ. உயரமும் உள்ள ஆலிவ் எண்ணெய்ப் புட்டியைப் போன்ற நேரான பக்கத்தைக் கொண்ட புட்டியொன்றினேக் கைவசப்படுத்துக. இந்தப் புட்டி பெரிய குவளையினுள் நிற்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். பெரிய குவளையை, சமதளமாகவுள்ள ஒரு மேசையின் மீது வைத்து, அதில் ஓர் உருளையின்மீது சரி யாக 1 செ. மீ. ஆழம் இருக்குமாறு நீரினை ஊற்றுக. சுமார் 1 செ. மீ. அகலமுள்ள ஒரு துண்டுத் தாளே நெட்டையான நேரான பக்கத் தைக்கொண்ட சாடியின்மீது நெடுக இருக்கு மாறு ஒட்டுக. அடுத்து, பெரிய குவளையினின் றும் நீரினை நெட்டையான சாடியினுள் ஊற்றி அந்நீர்மட்டத்தைக் குறிக்கத் துண்டுத் தாளின் மீது ஓர் அடையாளத்தினை இடுக. நெட்டை யான சாடியின் உட்புற அடிமட்டத்தினின்றும் இந்த அடையாளம் வரையிலுமுள்ள துரத்தை அளந்து அதன் உச்சி வரையிலும் சம இடை வெளிகள் இருக்குமாறு அடையாளங்களைச் செய்திடுக. இந்த அடையாளங்களுக்கிடையி லுள்ள தூரங்களே மில்லி மீட்டர்களை அளப் பதற்காகப் 10 சம பகுதிகளாகப் பிரிவினை 115