இயல் 9 நீரின் படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் A. §flát 3&##60s sooth (Composition) 1. எம்.வனம் நீர் சிதைவு செயப்பெறுதல் கூடும்?: இந்தக் கவர்ச்சிகரமான சோதனைக்கு ஓர் ஆறு-வோல்ட்டு சேகர மின்கலம் அல்லது மின் சேமக்கலம் அல்லது ஆறு உலர்ந்த மின் கலங்கள் கொண்ட ஒரு மின் கல அடுக்கு உங்கட்குத் தேவைப்படும். ஒவ்வொன்றும் 30 செ. மீ. நீளமுள்ள இரண்டு தாமிரக் கம்பிகளின் ஒவ்வொரு கோடி யிலும் காப்பிட்ட உறையில் சுமார் 6 செ. மீ. நீளத்திற்கு அகற்று க. அடுத்து, இரண்டு பழைய ஊற்றுப் பேணுக்களினின்றும் பேணு முனைகளைக் கைவசப்படுத்திக் காப்பிடப்பெருத ஒவ்வொரு கோடியையும் ஒவ்வொரு பேணு முனையுடனும் இறுக்கமாகச் சுற்றுக. இணைப் பினை முத்திரை அரக்கிளுல் முடித் தாமிரப் பகுதி புறத்தே தெரியாமல் முடிவிடுக. மின் கல அடுக்கின் ஒவ்வொரு கோடியுடனும் (Terminal) ஒரு கம்பியினை இனத்திடுக. ஆழ மற்ற ஒரு கண்ணுடித் தட்டொன்றினைக் கிட்டத்தட்டப் பாதியளவு நீரினல் நிரப்புக. இரண்டு சிறிய கண்ணுடிப் புட்டிகளை நீரினல் நிரப்பி, அவற்றின் வாய்களின்மீது அட்டைத் துண்டுகளை வைத்து அப் புட்டிகளைத் தட்டி லுள்ள நீரில் கவிழ்த்திடுக. இரண்டு புட்டி களையும் இரண்டு மெல்லிய துண்டுக் கட்டை களின்மீது நிறுத்துக ; இதல்ை தட்டின் அடி மட்டத்தினின்றும் புட்டிகளின் வாய்கள் உயர்ந்த நிலையில் உள்ளன. கவனத்துடன் ஒவ்வொரு பேணு முனையையும் ஒவ்வொரு புட்டியில் வைத்திடுக. கிட்டத்தட்ட இரண்டு மேசைக் கரண்டியளவு கந்தக அமிலத்தை நீரில் விட்டு அது நீரில் நன்கு கலக்குமாறு செய்க : ஒரு சில விநாடி நேரம் இதற்காகத் தருக. கந்தக அமிலம் உங்கள் தோலில் பட்டால் எரித்துவிடுமாதலா லும், ஆடையில் சிதறினல் துளைகளைச் செய்து விடுமாதலாலும் அதனேக் கையாளுவதில் மிகக் கவனமாக இருந்திடுக. கந்தக அமிலத்தை நீங்கள் மருந்துக்கடை, மின்கலம் பழுதுபார்க் ஆய்வகம் கும் நிலையம், அல்லது வேதியியல் இவ்விடங்களில் பெறலாம்.
- عهه
எல்லாம் தயாரானதும் மின்னேட்டத்தைத் திருப்பிவிடுக. இந்தச் சோதனை முற்றுப் பெறுவதற்குச் சிறிது நேரம் ஆகலாம். ஒவ்வொரு புட்டியிலும் என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக்குக. புட்டிகள் இரண் டும் ஒரே அளவுடையனவாக இருப்பின் ஒரு அடிகோலினேக்கொண்டு விளைவுகளை நீங்கள் அளந்திடலாம். இவை இரண்டும் எங்ங்னம் ஒப்பிடத் தகுந்தவையாக உள்ளன ? புட்டிகள் இரண்டும் வாயுவில்ை நிரம்பியதும் ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு கண்ணுடித் தட்டினை வைத்திடுக. விரைவாக நிரம்பிய புட்டியினைக் கண்ணுடித் தட்டின்மீது வாய் கீழ்நோக்கியிருக்குமாறு விட்டுவைக்க, தாமத மாக நிரம்பிய புட்டியினைக் கண்ணுடித் தட்டு மூடிய நிலையில் வாய் மேல்நோக்கியிருக்குமாறு அமைத்திடுக. வாய் மேல்நோக்கியிருக்குமாறு வைத்த புட்டியில் ஒளிவிடும் தணற்குச்சியினை வைத்திடுக. என்ன நிகழ்கின்றது? இந்த வாயு ஆக்ஸிஜன் ஆகும். தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் வைத்த புட்டியின் வாய்க்கு ஒர் எரியும் தணற்குச்சி யினைக் கொண்டு வருக. என்ன நிகழ்கின்றது? இந்த வாயு ஹைட்ரஜன் ஆகும். நீர் H, O என்று வழங்கப்பெறுவதை நீங்கள் எப்பொழு தாவது கேள்வியுற்றுள்ளிர்களா ? உங்கள் சோதனையினின்றும் இதனை உங்களால் விளக் கக் கூடுமா ? 2. ஆக்வலிஜன் தயாரிக்கப்பெறுதல் எங்ங்னம் கூடும்? : - - இயல்-7இல் 5 - 8, 9 இனங்களில் ஆக்ஸி ஜன் தயாரிப்பதற்குரிய வழிகள் கூறப் பெற்றுள்ளன. 127