பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. காற்றினின்றும் ஈரம் எப்ாடி னருகின்றது? குடுவையில் சிறிது நீரினை ஊற்றி அதனை ஒர் அடுப்பின்மீது அல்லது ஏதாவது ஒரு வெப்ப மூலத்தின்மீது வைத்திடுக : இந்த ஏற்பாட்டி ளுல் நீராவி நாற்றுக்களுக்கும் தட்டத்திற்கும் இடையே போகும். இப்பொழுது நீங்கள் மழை வட்டத்தை ஆராயும் நிலையில் இருக்கின் lர்கள். தேநீர்க் கெண்டி அல்லது குடுவை பூ மி யி லு ள் ள நீர்மூலம்போல் செயற்படு கின்றது. இஃது ஆவியாகிக் குளிர்ந்துள்ள தட்டத்திற்கு எழுகின்றது ; இத் த ட் ட ம் பெருக்கத்தினல் குளிர்வடையப்பெற்ற பூமிக்கு மேலுள்ள காற்றடுக்குகளே உணர்த்துகின் றது. இங்கு ஈரம் தட்டத்தின்மீது திரவமாகச் சுருங்கி நாற்றுக்களின்மீது மழையாகத் திரும் பவும் சொட்டுகின்றது. 6. வகுப்பில் உறைபனி : - . ஒரு த க ர க் குவளையைப்போன்ற ஒரு நெட்டையான உலோகக் கொள்கலனைப் பயன்படுத்தி வகுப்பில் உறைபனி இயற்றப் பெறுதல் கூடும். உப்பைப்போல் இரண்டு மடங்கு பனிக்கட்டியினைப் பயன்படுத்தி இந்தக் குவளையைப் பணிக்கட்டியையும் உப்பையும் கொண்டு ஒன்றுவிட்ட அடுக்குகளாக அமையு மாறு அடைத்திடுக. நீங்கள் இ ங் ங் ன ம் அடைக்கும்பொழுது ஒரு கோலினைக்கொண்டு கலவையை நன்கு நெருக்கமாகக் கெட்டிக்க. அது நிரம்பியதும் குவளையின் வெளிப்புறத் தைக் கவனமாக நோக்குக. சிறிது பனி உண்டாகி உறையலாம்; ஆளுல் நீங்கள் துண்மையாக உண்டாகும் வெண்ணிற உறைபனியையும் உற்றுநோக்கும் திறனுடையவர் களாக இருத்தல் வேண்டும். சிறிது நேரம் குவளையை அப்படியே வைத்திருந்தால் அது முழுவதும் ஓர் அழகான வெண்ணிற உறை பணியால் சூழப்பெறும். - 7. ஓர் ஆலங்கட்டியை (tailstone) ஆய்தல்: ஆலங்கட்டி மழை பெய்யும்பொழுது, சில ஆலங்கட்டிகளைச் சேகரித்திடுக. அவற்றைப் பாதியாக வெட்டி ஆலங்கட்டியின் பனிக்கட்டி எங்ங்னம் அடுக்குகளாக அமைந்துள்ளது என்பதை உற்றுநோக்குக. - 8. வெண்பனி ஏடுகளே (Snow-flakes) ஆய்தல் : பணி பெய்யும் நிலப் பகுதியில் நீங்கள் வாழ்ந்தால், சில வெண்பனி ஏடுகளை ஒரு கறுப்புக் கம்பளத் துணியில் சேகரித்து அவற்றை ஓர் உருப்பெருக்கும் கண்ணுடியினைக் கொண்டு கூர்ந்து நோக்குக. அவற்றுள் நீங்கள் பல்வேறு வடிவங்களைக் காண்பீர்கள். ஆனல், அவை எப்பொழுதும் ஆறு பக்கங் களைக் கொண்டனவாகவே இ ரு க் கு ம். இயற்கையின் மிக அழகான காட்சிகளில் வெண்பனி ஏடுகள் ஒரு சிறப்பான காட்சி யாகும். - . . 126