பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அமைதி நிலைமையிலும் இயக்க நிலையிலும் நீர் 7. கொழுப்புடன் சோப்பு எங்ஙனம் செயற்படு கின்றது? : மேற்குறிப்பிட்ட சோதனையில் செய்ததைப் போலவே வெதுவெதுப்பான நீரையும் எண் ணெயையும்கொண்டு மற்ருெரு சாடியினைத் தயார் செய்திடுக. இத் தடவையில் சுமார் அரைக் கிண்ண அளவு திரவ நிலையிலுள்ள சோப்பு அல்லது சிறு சோப்புத் துண்டுகளை நீரில் கரைத்துச் செய்யப்பெற்ற சோப்புக் கரை சலை அத்துடன் சேர்த்திடுக. இக் கலவையை வேகமாகக் குலுக்குக ; அதை அப்படியே சிறிது நேரம் விட்டுவைத்து அதனை மேற்கூறிய சோதனையிலுள்ள மாதிரிப் பொருளுடன் ஒப் பிடுக. சிறு கோளங்களின் நிலையிலுள்ள கொழுப்பினைச் சோப்பு உடைத்து அக் கலவை பால்போல் காணப்பெறுமளவிற்கு அவை யாவும் இப்போது பிரிக்கப்பெற்றிருப்பதை நீங்கள் உற்றுநோக்கி அறியலாம். 8. தூய்மையாக்குவதில் மென் னிரும்: இரண்டு மாதிரி அழுக்குத் துணிகளைத் தயார் செய்க. ஒன்றினைச் சோப்பினைக்கொண்டு அது தூய்மையாகும்வரையில் மென்னிரில் துவைத்திடுக. மற்ருென்றினை அதே அளவு சோப்பினைக்கொண்டு அதே கால அளவிற்கு வன்னீரில் துவைத்திடுக. இந்த இரண்டு மாதி ரித் துணிகளை உலர்வதற்காகத் தொங்கவிட்டு அவற்றின் வேற்றுமையை உற்றுநோக்குக. வன்னிரும் 9. சோப்பினை எங்ஙனம் செய்வது? : வீணுகப்போன கொழுப்பினின்றும் சோப்பு செய்யப்பெறுதல் கூடும். சிறிதளவு வீண் போன கொழுப்புக்களைக் கைவசப்படுத்தி அவற்றை ஒரு தட்டில் வைத்து உருகச் செய்க. பல அடுக்குத் துணிகளின்மூலம் அக் கொழுப் பினை வடிகட்டுக. அக் கொழுப்பினை நிறுத்து அதன் பிறகு அதற்குச் சுமார் மூன்றில் ஒரு பங்கு எடை இருக்கும்படியாக வணிகக் காரக் essors sio sis»és los T uqub (Sodium hydroxide) நிறுத்துக் காண்க. இக் காரச் கரைசலை நீரில் கரைத்திடுக. இக் கொழுப்பினே ஓர் இரும்புக் கெண்டியில் (Kettle) அல்லது தட்டில் சூடாக் குக. அது நன்ருக உருகிய நிலையிலிருக்கும் பொழுது காரக் கரைசலை மெதுவாக ஊற்றி அதனைத் தொடர்ந்து கிளறுக. கொதித்து வழி தலைத் தடுப்பதற்குச் சுவாலேயைத் தணித்து வைத்திடுக. கொழுப்பும் காரக் கரைசலும் கிளறப்பட்ட நிலையிலேயே 30 நிமிட நேரம் கொதித்துக்கொண்டிருக்கட்டும். கொதித்த பிறகு பயன்படுத்திய காரக் கரைசலின் எடை யைப்போல் சுமார் இரண்டு மடங்கு எடையுள்ள சோற்றுப்பினை (Common Salt) அதனுடன் சேர்த்திடுக. கலவையை நன்ருகக் கலக்குக. இக் கலவை குளிர்ந்ததும் உச்சியில் சோப்பு ஓர் அடுக்கு போல் காணப்பெறும். சோப்பை மட் டிலும் எடுத்து, உருகச் செய்து தீப்பெட்டிக ளில் ஊற்றி சிறு சிறு சோப்புக் கட்டிகளாகச் செய்திடுக. இது நல்ல சோப்பா? D. அமைதி நிலைமையிலும் இயக்க கிலையிலும் நீர் 1. அமுக்கம் என்பதன் பொருள் : சேற்றுப் பாதங்களுடன் அல்லது கால்புதை யரணங்களுடன் (Boots) ஒரு தாளின்மீது நின்று பாதச்சுவடுகளின் எல்லைக் கோட்டினை வரைந்திடுக. ஒரு சதுரக் கட்டக் காகிதத்தைப் பயன்படுத்திப் பரப்பினை அளந்திடுக; ஒரு சதுர சென்டி மீட்டருக்கு எவ்வளவு விசை (Force) என்பதைக் கணக்கிடுக. ஒரு பாதத் தில் நிற்பதால் உங்களுடைய எடை முழுவதும் கிட்டத்தட்டப் பாதிப் பரப்பின்மீது விநி யோகிக்கப்பெறும் , இங்ங்ணம் அதிகரித்த அமுக்கத்தின் அளவும் கணக்கிடப்பெறுதல் கூடும். - 2. எ ைடக் கும் அ முக்க த் தி ற் கு மு ள் ள வேற்றுமை : ஒன்று மற்ருென்றினைவிட அதிகச் சிறிதாக இருக்குமாறு இரண்டு சதுரத் துண்டு மரக்கட் டைகளே ஆக்குக: விளக்கப்படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு இரண்டினையும் சேர்த்திடுக. ஒவ்வொன்றின் முகங்களையும் அடுத்தடுத்து ஒரு களிமண் பலகை அல்லது பிளாஸ்டிக் 132