பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரை (Plasticine)யின்மீது வைத்து ஒரே அளவு விசையினைக்கொண்டு (Force) ஒவ் வொன்றையும் அழுத்துக. இதல்ை ஏற்பட்ட முத்திரைகளின் வேறுபட்ட ஆழங்களால் அமுக்க வேறுபாட்டினைக் காணலாம். 3. திரவங்கள் அமுக்கத்தை உளுறுகின்றன (Exert) என்பதைக் காட்டுதல் : 15 செ.மீ. நீளமுள்ள இரண்டு கண்ணுடிக் குழல் அல்லது ஒளிபுகும் பிளாஸ்டிக் சோடா பருக உதவும் குழல்களை ஒரு சிறிய இரப்பர்க் குழலில்ை இணைத்து அவற்றை விளக்கப் படத் தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு செங்குத் தாகவுள்ள பலகையுடன் பொருத்துக. கிட்டத் தட்ட 5 அல்லது 6 செ.மீ. ஆழத்திற்கு அக்குழல் களில் சிறிது வண்ண நீரினை வைத்திடுக. இது தான் உங்கள் அழுத்தமானி (Manometer) . அல்லது அமுக்கத்தை அளவிடும் கருவியாகும். ஒரு சிறு புனலே ஒரு மெல்லிய இழுக்கப் பெற்ற நிலையிலுள்ள இரப்பரால் இறுக்க மாக மூடி ஒரு கயிறு அல்லது நூலினைக் கொண்டு இறுகக் கட்டிவிடுக. இந்தப் புனலை 30 செ.மீ. நீளமுள்ள ஒரு இரப்பர்க் குழலால் அழுத்தமானியுடன் இனத்திடுக. ஒரு தொட் டியிலுள்ள நீரில் புனலை அமுக்கி அழுத்தமானி யைக் கவனித்திடுக. 4. ஆழத்திற்கேற்ப நீரின் அமுக்கம் மாற்றம் அடைகின்றது : மேற்குறிப்பிட்ட சோதனையில் பயன்படுத் திய புனலையும் அழுத்தமானியையும் இங்குப் பயன்படுத்துக. ஒரு நெட்டையான கண்ணுடிச் சாடி அல்லது தொட்டியில் நீரை நிரப்புக. உங் களுடைய அழுத்தமானியைக்கொண்டு மேற் பரப்பிற்குச் சற்றுக் கீழ் அமுக்கத்தினை அளந் திடுக. அடிமட்டத்தில் அமுக்கத்தினை அளத் திடுக. D. அமைதி கிலேமையிலும் இயக்க திலையிலும் நீர் ஆழத்திற்கேற்ப அமுக்கம் எங்கனம் மாறுபடுகின்றது ? 5. அமுக்கம் திரவத்தைப் பொறுத்துள்ளது : புனல் பொருந்தக் கூடிய இரண்டு கண்ணு டிச் சாடிகளைக் கைவசப்படுத்துக. ஒரு சாடியை நீராலும், மற்றுெரு சாடியை அதே ஆழத்திற்கு நீரைவிடத் திண்மை குறைவான சாராயம் போன்ற ஒரு திரவத்தாலும் நிரப்புக, நீருள்ள சாடியின் அடிமட்டத்தில் அமுக்கத்தை அளந் திடுக, அங்ங்ணமே சாராயம் உள்ள சாடியின் அடிமட்டத்திலும் அமுக்கத்தை அளந்திடுக. இரண்டு அமுக்கங்களும் எங்ங்னம் ஒப்பீடாக உள்ளன ? 6. ஒரே ஆழத்தில் ஒரு பெரிய பாத்திரத்திலுள்ள நீரின் அமுக்கமும் ஒரு சிறிய பாத்திரத்தி லுள்ள நீரின் அமுக்கமும் ஒரே அளவே : மேற்குறிப்பிட்ட சோதனைகளில் பயன்படுத் தப்பெற்ற புனலையும் அழுத்தமானியையும் இதிலும் பயன்படுத்துக. சிறு குறுக்கு விட்டத் தைக்கொண்ட ஒரு நெட்டையான கண்ணுடிச் சாடியினையும் பெரிய குறுக்கு விட்டத்தைக் கொண்ட ஒரு கண்ணுடிச் சாடியினையும் கைவசப்படுத்துக. இரண்டு சாடிகளிலும் ஒரே அளவுள்ள ஆழத்திற்கு நீரை நிரப்புக. ஒவ் வொரு சாடியின் அடிமட்டத்திலும் அமுக் கத்தை அளந்திடுக. அவை இரண்டும் எங்கனம் ஒப்பீடாக உள்ளன ? 7. ஆழத்திற்கேற்ப நீரின் அமுக்கமும் அதிகரிக் கின்றது என்பதைக் காட்டும் மற்றெரு வழி : ஒரு நெட்டையான தகரக் குவளையைக் கண்டெடுத்திடுக. குவளையின் பக்கத்தில் சுமார் 3 செ.மீ. இடைவெளி விட்டு கீழிருந்து மேல் வரையில் துளைகளை இடுக. ஓர் ஒட்டு நாடா அல்லது பிளாஸ்டிக் நாடாவினைத் துளைகளின் வரிசையின்மீது வைத்து குவளையின் மேல் மட்டம் வரையிலும் நீரால் நிரப்புக. குவளையை ஒரு கழிநீர்த் தொட்டியின் அருகில் பிடித்துக் கொண்டு அடிமட்டத்தில் தொடங்கி துளைக ளின்மீதுள்ள நாடாவினை அகற்றுக. நீர்த் த ரைகளே உற்றுநோக்குக: குவளையினின் றும் வெளிநோக்கிச் செல்லும் தூரங்களைக் கவனித்திடுக. . . - 133