பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. அமைதி நிலைமையிலும் இயக்க நிலையிலும் நீர் 8. எல்லாத் திசைகளிலும் நீரின் அமுக்கம் ஒரே அளவுதான் : ஓர் ஆணியைக்கொண்டு ஒரு நெட்டையான குவளையின் அடிப் பகுதியைச் சுற்றிலும் துளை களை இடுக. மேலே குறிப்பிட்டதைப்போலவே துளைகளை நாடாவினுல் மூடுக. குவளையை நீரி ளுல் நிரப்பி அதை ஒரு கழி நீர்த் தொட்டியின் மீது பிடித்துக்கொண்டு துளைகளின்மீதுள்ள நாடாவின நீக்குக. நிகழ்வதை உற்று நோக்கிக் குவளையைச் சுற்றிலுமுள்ள துளை களினின்றும் நீர்த்தாரைகள் பாய்ந்து செல் லும் தூரங்களை ஒப்பிடுக. 9. குறிப்பிட்ட எந்த ஆழத்திலும் மேல்நோக்கு அமுக்கமும் கீழ்நோக்கு அமுக்கமும் ஒரே ខទាrលុា...យោល ៖ குறைந்தது 15 செ.மீ. நீளமும் 4 செ.மீ. குறுக்கு விட்டமும் உள்ள ஒரு கண்ணுடி நீள உருளையைக் கைவசப்படுத்துக. ஆலிவ் எண் ணெய்ப் புட்டி போன்ற ஒரு நேரான பக்கத் தைக்கொண்ட ஒரு புட்டியினின்றும் அதன் அடி மட்டத்தை நீக்குவதால் (இயல்-18, இனம்-27 (b) ஐக் காண்க.) அத்தகைய நீண்ட ஒரு குழ லைச் சரிக்கட்டலாம். ஒரு தெளிவான பிளாஸ் டிக் குழல் இதற்குப் போதுமானது; அல்லது பாரஃபின் மெழுகு அல்லது அவல் அரக்கு (Sheilac) பூசப்பெற்ற அட்டையாலான ஓர் அஞ்சல் குழலும் இதற்குப் பொருத்தமானது. கிட்டத்தட்ட 5 செ.மீ. நீளத்தைப் பக்கமா கக் கொண்ட ஒரு சதுரமான அட்டையை வெட் டுக. அதன்மீது பாரஃபின் மெழுகு அல்லது அவல் அரக்கினைப் பூசுக. அதன் நடுவில் ஒரு கயிறு அல்லது நூலினை இணேத்து ஒரு நாடாத் துண்டினை ஒட்டிவிடுக. குழல்வழியாகக் கயிற்றைச் செலுத்திக் குழலின் அடிமட்டத் தில் அட்டை இருக்குமாறு கயிற்றில்ை அத னைப் பிடித்துக்கொள்க. அட்டைப்பக்க முனை கீழ் நோக்கியிருக்குமாறு குழலே ஒரு நீருள்ள சாடியில் ஆழ்த்துக. கயிற்றினை இப்பொழுது விட்டுவிடுக. இப்பொழுது வண்ண நீரினைக் குழலுக்குள் ஊற்றுக, அட்டை விழும் பொழுது குழலினுள் நீரின் ஆழத்தைக் குறித்துக் கொள்க. 10. சமநிலை நீர்ப் பிழம்புகள் : பல்வேறு வடிவங்களையுடைய, ஆளுல் கிட்டத் தட்ட ஒரே உயரத்தையுடைய, பல கண்ணுடிப் புட்டிகளினின்றும் அவற்றின் அடி மட்டங்களை நீக்குக (இயல்-18, இனம்-37 (b) ஐக் காண்க). விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு கண்ணுடிக் குழல்களைக்கொண்ட அடைப் பான்கள் அல்லது தக்கைகளை அவற்றில் பொருத்துக. எல்லாப் புட்டிகளையும் விளக்கப் படத்திலுள்ளவாறு ஒன்ருக புட்டிகள் யாவும் கிட்டத்தட்ட நிரம்பும்வரையில் அவற்றில் வண்ணநீரினை ஊற்றுக. ஒரு குறிப் பிட்ட திரவத்தில் அமுக்கம் பாத்திரத்தின் பரு மன் அல்லது வடிவத்தைச் சாராதுள்ளது என்பதை மீண்டும் இந்த அனுபவம் காட்டு கின்றது. 11. நீரின் அமுக்கத்தைக்கொண்டு பளுவான எடைகளை உயர்த்துதல் : இரப்பராலான ஒரு வெந்நீர்ப் புட்டியை கைவசப்படுத்துக. அதன் கழுத்தில் சிறிய கண்ணுடிக் குழலைக்கொண்ட ஓர் ஒரு-துளை அடைப்பான இறுக்கமாகப் பொருத்துக. ஒரு தகரக் குவளையின் அடிமட்டத்தில் ஒரு துளை i34