பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திரவ மேற்பரப்புக்கள் தட்டில் வைத்திடுக. கண்ணுடிப் பாத்திரத் தின் உச்சி விளிம்பினை ஓர் உலர்ந்த துணி யினுல் தேய்த்திடுக. விளிம்புவரை நிரம்பும் வரையில் கண்ணுடிப் பாத்திரத்தில் நீரினை ஊற்றுக. உச்சிக்குமேல் பல மில்லிமீட்டர் கள் உயரத்தில் கண்ணுடிப் பாத்திரத்தை நீங் கள் நீரப்புதல் கூடும் என்பதை நீங்கள் காண் பீர்கள். இப்பொழுது நாணயங்கள் அல்லது திருகாணியை உறுதியாகப் பொருத்தும் உலோக வளையங்களை நீருக்குள் விளிம்பின் வழியாகப் போடுக. நீர் வழிவதற்கு முன்னர் இவற்றைப் போட்டு நீங்கள் எவ்வளவு உயரம் வரையில் நீரைக் குவிக்க முடியும் என்பதைப் பாருங்கள். 7. ஒரு துரிகையின் முள் மயிர்களைக் கூரிய தாக்குதல் : வண்ணந்தீட்டும் ஏதாவது ஒரு தூரிகை (Brush) வகையைக் கைவசப்படுத்தி அதன் முள் மயிர்களை உற்றுநோக்குக. இப்பொழுது நீரில் அத் தூரிகையைத் தோய்த்திடுக; மேற் பரப்பு இழுவிசை முள் மயிர்களை ஒன்ருகச் சேர்த்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். இச் சோதனையில் ஓர் ஓவியரின் வண்ண ஒவியத் தூரிகை அல்லது சவரத்தின்போது பயன் படுத்தப் பெறும் தூரிகை மிக நன்ருகச் செயற் படும். 9 8. மேற்பரப்பு விசையுடன் ஒரு தந்திரச் செயல் : பயன்படுத்தப்பெற்ற ஒரு தகரக் குவளை யைக் கைவசப்படுத்தி, ஓர் ஆணியைக்கொண்டு அதில் ஐந்து துளைகளை இடுக. அத் துளைகள் கிட்டத்தட்ட அக் குவளையின் அடி மட்டத்தின் அருகில் ஐந்து மில்லிமீட்டர்கள் இடைவெளி களுடன் அமைதல் வேண்டும். இப்பொழுது به مجا که جهنم سسه .~* حساسیس குவளையை நீரினல் நிரப்பி, அந்நீர் ஐந்து தாரைகளாகக் குவளையினின்றும் வெளிவரு வதை உற்றுநோக்குக. இந்த நீர்த்தாரைகளை உங்கள் பெருவிரலாலும் சுட்டு விரலாலும் ஒன்ருக இணைத்திடுக; ஐந்து தாரைகளை யும் இப்பொழுது ஒன்ருகுமாறு செய்திடலாம். குவளையின் துளைகளின் குறுக்கே உங்கள் உள்ளங்கையினுல் துடைத்தால் நீர் மீண்டும் ஐந்து தனித்தனி தாரைகளாகப் பாயும். 9. துணியின் வழியாக நீர் ஓடாது : ஒரு கண்ணுடிச் சாடியினையும் ஒரு பழைய துணி அல்லது கைக்குட்டையினின்றும் ஒரு துண்டுத் துணியையும் தேர்ந்தெடுத்திடுக. சாடியை நீரினல் நிரப்புக. துணியை நன்ருக நனைத்து, சாடி வாயின்மீது நன்கு விரித்து, அதனை ஒரு கயிறு அல்லது நூலினைக் கொண்டு இறுகப் பிணைத்திடுக. சாடியை ஒரு வாளி நீரின்மீது கவிழ்த்து, மேற்பரப்பு இழுவிசை துணியின் வழியாக நீர் வருவதைத் தடுத்து நிறுத்துவதை உற்றுநோக்குக. 10. மேற்பரப்பு இழுவிசையின்மீது சோப்பின் விளைவு : - ஒரு பெரிய தட்டினைத் தேர்ந்தெடுத்து அது மிகத் தூய்மையாக உள்ளது என நீங்கள் உறுதி செய்யும்வரை அதனை நன்கு நீரால் கழுவுக. தட்டினைத் தண்ணிரால் (Cold water) நிரப்புக; நீர் அமைதியாகும்வரை மேசையின்மீது சிறிது நேரம் அப்படியே விட்டு வைத்திடுக. நீரின் மேற்பரப்பின்மீது முகத்தில் பூசும் மணப் பொடியைத் (Talcum powder) தூவுக. ஒரு சோப்புத் துண்டை நீரில் நனைத்து அதனைக்கொண்டு தட்டி லுள்ள நீரைத் தட்டின் விளிம்பருகில் தொடுக. மணப் பொடி உடனே எதிர்ப்புறத்தை நோக்கி இழுக்கப்பெறும். ஓரிடத்தில் சோப்பு மேற் பரப்பு இழுவிசையைக் குறைத்துவிட்டது. மறுபுறத்தில் அதிகமாகவுள்ள மேற்பரப்பு இழுவிசை மேற்பரப்பைச் சுருங்கச் செய்து, த ன் னு ட ன் மணப்பொடியையும் இழுக் கின்றது. - 11. மேற்பரப்பு இழுவிசையின்மீது பெட்ரோலின் விளைவு : தட்டு மிகத் தூய்மையாகவுள்ளது என்பதை உறுதி செய்துகொண்டு மேற்குறித்த சோதனை 144