பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D, விசைகளின் திசையினே மாற்றுவதற்குப் பொறிகள் எங்ஙனம் பயன்படுத்தப்பெறுகின்றன ? குறைவாகச் சுற்றுகின்றதா என்பதைக் கவ னித்திடுக. தோல் பட்டையின் உதவியால் சிறிய நூலுருளே இரப்ார்ப் பட்டை பெரிய நூலுருளை இயக்கப்பெறும் பொறி அமைப்புக்களைப்பற்றிய ஒரு பட்டியல் தயார்செய்க. 2. மிதிவண்டியைப் பயன்படுத்துதல் : ஒரு மிதிவண்டியை அதன் ஆசனத்தின் மீதும் கைச் சட்டங்களின் மீதும் தாங்கி நிற் கும்படியாகத் தலைகீழாக வைத்திடுக. மிதிப் படி (Pedal) சக்கரத்தைச் சரியாக ஒரு சுற்று சுற்றி, பின் சக்கரம் சுற்றும் எண்ணிக்கை களைக் கணக்கிடுக. 3. முட்டை கலக்கும் பொறி : ஒரு முட்டை கலக்கும் பொறியைச் சோதித் திடுக; கையில்ை சுற்றும் கருவி அல்லது வேறு பொறியமைப்பு, எதுவாயினும் அதில் இணைந்து சுழலும் பல்சக்கரங்களினல் (Gears) அதிகரித்த வேகம் பெறப்படுகின்றது. 4. நெம்புகோலைப் பயன்படுத்துதல் : ஒரு நெம்பு கோலின் ஆதாரத் தானம் நடுவி லில்லாதபொழுது அதன் நீண்ட புயம் குட் டைப் புயத்தைவிட அதிகத் துரத்திலும் வேக மாகவும் இயங்குவதைக் காட்டுக. ஒரு பேஸ் பால் ' (Base ball) அல்லது கிரிக்கெட்' பந்தின் (Cricket ball) பந்தடி மட்டை இந்த நற்பயனேச் செயற்படுத்துகின்றது. நெம்பு கோல்களையும் எளிய பொறிகளையும் பயன் படுத்தி வேகத்தை அதிகரிக்கும் வேறு எடுத் துக்காட்டுக்களின் பட்டியலொன்றைத் தயாரித் திடுக. 5. கப்பியைப் பயன்படுத்துதல் : சோதனை A-12இல் காட்டப்பெற்ற கப்பி அமைப்பினைப் பயன்படுத்துக. இயங்கும் கப்பி யில் விசையைச் செலுத்தி, கயிற்றின் மற் ருெரு முனையிலுள்ள எடை எ வ் வ ள வு வேகமாக எழுகின்றது என்பதை உற்று நோக்குக. 6. உருளையும் அச்சுமான அமைப்பினைப் பயன் படுத்துதல் : சோதனை A-8 இல் நீங்கள் பயன்படுத்திய பென்சிலேக் கூராக்கும் கருவியையே பயன் படுத்துக. புத்தகங்களை வைத்திருந்த பக் கத்தை இழுத்து எவ்வளவு வேகமாக சுழற்சி முறை மாற்றுப்பொறி (Crank) சுற்றுகின்றது என்தை உற்றுநோக்குக. D. விசைகளின் திசையினை மாற்றுவதற்குப் பொறிகள் எங்ங்ணம் பயன்படுத்தப்பெறுகின்றன? 1. Lomāfi; 5mäß (Elevator): எளிய பொருள்களைக்கொண்டு ஒரு தூக்கி யின் செயற்படும் மாதிரி அமைப்பு ஒன்று எளி தாக இயற்றப்பெறலாம். சுழலும் பீப்பாய் கள் அல்லது விளிம்பில் பள்ளமுள்ள சக்கரங் களுக்கு காஃபியின் உலோகக் கலங்கள் போது மானவை. ஒரு சுத்தியையும் ஒரு பெரிய ஆணியையும்கொண்டு கலங்களின் அடிமட் டங்களிலும் மூடிகளிலும் சரியான மையத்தில் துளையிடுக. மூடிகளைத் திரும்பவும் அமைத்து, அவை இரண்டும் எளிதாகச் சுழலும்படியாக ஒரு பலகையின் அமைத்திடுக. தூக்கிப் பொறி யூர்திக்காக ஓர் அட்டைப் பெட்டி அல்லது மரப்பெட்டியினைப் பயன்படுத் து.க. பெட்டியின் இரண்டு பக்கங்களிலும் கயிறுகளை இணைத்து அக்கயிறுகளைச் சுழலும் பீப்பாய்களைச்சுற்றிலும் விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு சுற்றுக. உருவம் அமைக்கும் களிமண் ஈடுசெய்யும் எடையாகப் பயன்படுத்தப்பெறலாம்; அது கிட்டத்தட்ட பொறி யூர்தியின் எடையைச் சமனிலையாக்க எதிர்ப்பக்கங்களில் ஏற்றி 154