பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. உராய்வினைப் பயன் படுத்தலும் அதனை அடிக்கி ஆள்தலும் பெட்டியை நகர்த்துவதற்குத் தேவையான விசையைக் கண்டறிக. இங்ங்னம் கிடைத்த எடுகோள்களைச் (Data) சுருக்கமாக அமைத்து, இந்த விளைவுகட்குக் காரணங்களைக் கூற முயலுக. - 2. உருளைகளைப் பயன்படுத்துதல் : மேற்குறிப்பிட்ட சோதனையையே திரும்ப வும் செய்க ஆளுல் உருளைகட்குப் பதிலாக உருளையினக்கொண்ட சறுக்குக் கட்டை அமைப்பு (அல்லது பல சறுக்குக் கட்டை அமைப்புக்கள்) .ே பா ன் ற உருளையினைக் கொண்ட ஒரு பொறியமைப்பினைப் பயன் படுத்துக. 3. நழுவும் உராய்வு : ஓர் உருளையினைக்கொண்ட ச று க் கு க் கட்டை அமைப்பின் இருபக்கங்களிலுமுள்ள இரப்பர்ப் பட்டைகளைக் குறுக்கும் நெடுக்கு மாக அமைத்து உருளைகளைப் பூட்டிவிடுக. குறுக்கு நெடுக்கு இரப்யர்ப் பட்.ை இந்தச் சறுக்குக் கட்டை அமைப்பினே சாய்வாக அமைக்கப்பெற்றுள்ள ஒரு பலகை யின்மீது வைத்து, இரப்பரின் உராய்வு எங்ங் னம் அதை நழுவவிடாமல் காக்கின்றது என்ப தைக் கவனித்திடுக. 4. உராய்வு உண்டாகும் இடங்கள் : பல்வேறு பொறியமைப்புக்களில் பகுதிகள் ஒன்ருகத் தேயும் இடங்களைக் கண்டறிக. உருளைகளைக்கொண்ட சறுக்குக் க ட் ைட அமைப்புக்கள், கப்பிகள், விளையாட்டுக் கருவி யின் உருளைகள் இவைகட்கு அடிக்கடி எண் ணெய் தேவைப்படுகின்றது. உருளையினைக் கொண்ட சறுக்குக் கட்டை அமைப்பினைப் போன்ற எண்ணெய் தேவைப்படும் இரண்டு ஒரே மாதிரியான கோளத்திரளமைப்புக்களைக் கண்டறிய முயலுக. ஒன்றில் எண்ணெயை விட்டு அது தளர்வாகச் சுழலுவதை எண் ணெய் விடப்பெருத மற்றென்று சுழலுவத னுடன் ஒப்பிடுக. 5. எண்ணெயினுல் உராய்வினைக் குறைத்தல் : இரண்டு கண்ணுடித் தட்டுக்களை ஒன்றன் பக்கத்தில் ஒன்ருகக் கிடத்தி அவற்றுள் ஒன் றன்மீது ஒரு சில சொட்டுக்கள் எண்ணெயை விடுக. மாணுக்கர்களை எண்ணெய் விடப் பெருத தட்டின்மீது தம்முடைய விரல்களில் ஒன்றினை முன்னும் பின்னுமாகத் தேய்க்கு மாறும், அதன்பிறகு எண்ணெய் விடப்பெற்ற தட்டின்மீது அங்ங்னம் தேய்க்குமாறும் ஏவுக. இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை உணரு மாறு கூறுக. 6. கரடுமுரடான மேற்பரப்புக்களின் உராய்வு : இரண்டு உப்புத்தாள் துண்டுகளைச் சேர்த்து வைத்திடுக. ஒன்றை மற்ருென்ருேடு சேர்த் துத் தேய்க்கும்பொழுது உண்டாக்கப்பெறும் உராய்வினைக் கவனித்திடுக. இப்பொழுது இரண்டு உப்புத்தாள்கட்கும் இடையில் சிறி தளவு கொழுப்பு நெய்யை (Grease) வைத் திடுக, உப்புத்தாளின் மேற்பரப்பின்மீதுள்ள ஒழுங்கற்ற இடங்களைக் கொழுப்பு நெய் நிரப்பு வதால் உராய்வு மிக அதிக அளவில் குறைக் கப்பெறுகின்றது. ஒரு பொறியின் இயங்கும் பகுதிகளில் கொழுப்பு நெய்யைத் தடவுவது இ ம் மா தி ரி ய க வே செயற்படச் செய் கின்றது. 7. கோளத்திரளமைப்புக்களால் குறைத்தல் : உச்சியைச் சுற்றிலும் ஆழமான பள்ளங் களைக்கொண்ட வண்ணப் பூச்சுக் குவளைகளைப் போன்ற இரண்டு தகரக் குவளைகளைக் கண்டு பிடித்திடுக. ஒன்றன்மீதுள்ள பள்ளத்தில் கோலிக் குண்டுகளைக் கிடத்தி மற்ருெரு குவளை யைக் கோளத்திரளமைப்பு உண்டாகுமாறு கோலிக்குண்டுகளின்மீது கவிழ்த்திடுக. ஒரு உராய்வினைக் 156