பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. உராய்வினைப் பயன்படுத்தலும் அதனை அடிக்கி ஆள்தலும் புத்தகத்தை உச்சியின்மீது வைத்து எவ்வளவு எளிதாக செய்முறை விளக்கக் கோளத் திரள வண்ணப்பூச்சுக் ஆவளே கோலிக்குண்டுகள் மைப்பு சுழலுகின்றது என்பதைக் கவனித் திடுக. 8. உண்மையான கோளத்திரளமைப்பு : உண்மையான கோளத்திரளமைப்புக்களே யும் உருளைத் திரள மைக்களையும் (Roller bearings) சோதித்திடுக. கோளத்திரளமைப் புக்கள் அல்லது உருளைத்திரள மைப்புக்களைக் கொண்டே பொறியமைப்புக்களின் பட்டிய லொன்றினைத் தயார் செய்க. 9. திரும்பவும் கோளத்திரளமைப்புக்கள் : ஒரு தகரக்குவளை மூடியின்மீது சில கோலிக் குண்டுகளை வைத்திடுக. உங்க ள் ஒரு பாதத்தை கோலிக்குண்டுகளின்மீது வைத்து, நீங்கள் எவ்வளவு எளிதாக வட்டமாகச் சுழல முடிகின்றது என்பதைக் கவனித்திடுக. 10. காற்றுப் பிய்ச்சலால் (Stream) உராய்வு குறைக்கப்பெறுதல் : சுமார் 10 செ. மீ. குறுக்குவிட்டமுள்ள ஒரு வட்டமான அட்டைத் துண்டினை வெட்டுக. 5 செந் தழல் நிலையிலுள்ள ஒரு குண்டுசியால் மையத்தின் வழியாக ஒரு துளையைச் சுட்டு எரித் திடுக. ஒரு சிறிய நூலுருளையை இரண்டு பாதி யாக அறுத்து ஒரு பாதியின் ஆதி முனையை வட்டமான அட்டைத் துண்டின் மையத்தில் பசையில்ை ஒட்டிவிடுக. நூலுருளையில் பொருந் தக்கூடிய ஒரு மூங்கிற் குழல் துண்டு அல்லது வேறு ஏதாவது குழல் துண்டினைக் கண்டு பி டி த் தி டு க. இதனை ஒரு சிறிய பலூ /ー னின் கழுத்தினுள் நுழைத்து ஒரு நூல்கயிறு அல்லது இரப்பர்ப் பட்டையினைக்கொண்டு இணைப்பை இறுகப் பிணைத்திடுக. பலூனை ஊதி உப்பச் செய்து, அதன் கழுத்தினை நசுக்கி, நூலுருளையின் துளையினுள் குழலேச் செருகுக. வட்டமான அட்டைத் துண்டினை மேசையின்மீது வைத்துக் காற்றினை விடுவித் திடுக. துளையின்வழியாக விடுவிக்கப்பெறும் விரியும் காற்று அட்டையினை மேலுயர்த்தும் ; அதற்கு ஒரு சிறிய அசைவு (Flick) கொடுக்கப் பெற்ருல் அது மேசையின் குறுக்கே சிறிதும் உராய்வின்றிப் பாய்ந்து செல்லும். இச் சோதனை வட்டமிடும் வானூர்தியின் (Hovercraft) தத்துவத்தை விளக்குகின்றது. 7