பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 11 விசைகள் சடத்துவம் இவற்றின் படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் A, சமனிலை 1. சமனிலையிலுள்ள விசைகளின் படிப்பிற் குரிய ஒகு பொறியமைப்பினை இயற்றுதல் : இயல் 10, சோதனை - A 1 ஐப் பார்க்க. 2. ஏற்ற விளையாட்டில் சமனிலை : 3 மீட்டர் நீளமுள்ள ஓர் உறுதியான பலகை யையும், ஓர் ஏற்ற விளையாட்டு மேடை அல்லது பெட்டியையும் கைவசப்படுத்துக ; பலகையை மேடை அல்லது பெட்டியின்மீது சமனிலை யாக்கி ஒர் ஏற்றம் அல்லது ஊஞ்சல் அமைக் கப்பெறலாம். இயன்ருல் இதனை வகுப்பறை யில் அமைத்திடுக. உங்கள் பள்ளி ஆடுகளத் தில் பிள்ளைகட்காக ஓர் ஏற்ற விளையாட்டு அமைப்பு இருக்கலாம். (இயல் 10, சோதனை - A 7 ஐயும் பார்க்க). சம எடையுள்ள இரண்டு மாளுக்கர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பலகையின் இரண்டு கோடியிலும் இ ரு க் க ச் ெச ய் து சமனிலையாக்குக. சமனிலைத் தானத்திலிருந்து ஒவ்வொரு பிள்ளையும் உட்கார்ந்திருக்கும் இடம் வரையிலுள்ள தூரத்தை அளந்திடுக. அடுத்தாற்போல் ஒரு பளுவான குழந்தை ஓர் இலேசான குழந்தையுடன் சமனிலையாகும் படி செய்து, செய்யப்பெறவேண்டிய மாற்றங் களே உற்றுநோக்குக. அடுத்து, ஒரு குழந் தையை எதிர்ப்புறத்திலுள்ள இ ர ண் டு குழந்தைகளுடன் சமனிலையாகும்படி செய்க. மாற்றங்களை உற்றுநோக்குக. ஒவ்வொரு தடவையும் சமனிலைத் தானத்திலிருந்து குழந்தை இருக்கும் இடம் வரையிலுள்ள தூரத்தை அளந்து, அந்தத் தூரத்தைக் குழந்தையின் எடையால் பெருக்கிளுல் நீங்கள் சமனிலைபற்றிய கவர்ச்சிகரமான உண்மை யைக் கண்டறிவீர்கள். குறிப்பு : இரண்டு குழந்தைகளும் ஒரே பக் கத்திலிருப்பின் சமனிலைத் தானத்திலிருந்து ஒவ்வொரு குழந்தையும் இருக்கும் தூரத்தை அளந்து, அதனை ஒவ்வொரு குழந்தையின் எடையால் பெருக்கிக் கிடைக்கும் இரண்டு பெருக்கற்பலன்களையும் கூட்டுக. 3. ஒரு சமனிலைத் தந்திரம் : ஒரு மழமழப்பான மீட்டர் கோலினைக் கைப் பற்றுக ; அஃது உங்கள் இரண்டு விரல்களின் மீது இலேசாக நிற்கட்டும். உங்கள் விரல் களைக் கோலின் முனையருகில் வைத்து அதன் பிறகு அவைகளை மையத்தை நோக்கி நகர்த் துக. மீட்டர் கோலில் உங்களுடைய விரல்கள் எங்குச் சந்திக்கின்றன ? உங்களுடைய வலக் கையின் விரலை மீட்டர் கோலின் முனையருகி லும் மற்ருெரு விரலே அடுத்த பக்கத்தில் மையத்திற்குப் பாதி தூர்த்திலும் வைத்து இச் சோதனையைத் திரும்பவும் செய்திடுக. இப் பொழுது உங்கள் விரல்கள் எந்த இடத்தில் சந்திக்கின்றன ? உங்கள் இடக்கையின் விரலை மீட்டர் கோலின் கோடியிலும், வலக்கையின் விரல் அடுத்த பக்கத்தில் கிட்டத்தட்ட மையத்திற்குப் பாதி துரத்திலும் வைத்துக் கொண்டு இச் சோதனையை மாற்றிச் செய் திடுக. உங்களுடைய விரல்கள் இப்பொழுது எங்குச் சந்திக்கின்றன ? வேறு தூரங்களைப் பயன்படுத்தியும் இச் சோதனையைச் செய்ய முயலுக. இந்தக் கவர்ச்சிகரமான தந் திரத்தை நீங்கள் விளக்கக் கூடுமா ? 4. சில எளிய சமனிலைச் சோதனைகள் : (அ) ஒரு கூரிய கத்தியைக்கொண்டு ஏதா வது ஒரு பச்சைக் காயினின்றும் அல்லது உரு வம் அமைக்கும் களிமண்ணினின்றும் சுமார் 2.5 செ. மீ. அளவுள்ள துண்டொன்றினை வெட்டுக. ஒரு பென்சிலின் கூரான நுனியை அத்துண்டின் வழியாகத் துளைத்திடுக ; அஃது அடுத்த பக்கத்தில் 2.5 செ. மீ. நீட்டிக் கொண்டிருக்கட்டும். விளக்கப் படத்தில் காட் டப்பெற்றுள்ளவாறு ஓர் உணவுண்ணும் கவுர் முள்ளினைச் செருகுக. இப்பொழுது பென்சி லின் கூரிய முனையை ஒரு மேசையின் ஓரத் 158